இலங்­கையில் கல்வி பயிலும் 45 இலட்சம் மாண­வர்­க­ளுக்கு 5 இலட்சம் ரூபா பெறு­மதி வாய்ந்த இல­வச காப்­பு­றுதி திட்டம் நேற்று அர­சாங்­கத்­தினால் மாணவர் மயப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நி­கழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தலை­மையில் நேற்று காலை அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது.இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, அமைச்­சர்­க­ளான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், தயா கமகே, இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான வீ.இரா­தா­கி­ருஷ்ணன், ருவன் விஜே­வர்­தன ஆகி­யோ­ரும் ­க­லந்து கொண்­டனர்.

அத்­துடன் கல்வி அமைச்சின் அதி­கா­ரிகள், மாண­வர்கள் உள்­ளடங்­க­லாக பெருந்­தொ­கை­யானோர் கலந்து கொண்­டனர். நடப்­பாண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியின் பிர­காரம் மாண­வர்­க­ளுக்­கான இல­வச காப்­பு­றுதி திட்­டத்தை  தற்­போது அர­சாங்கம் நிறை­வேற்­றி­யுள்­ளது.குறித்த காப்­பு­றுதி திட்­டத்­திற்கு சுரக்ஷா என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

சுரக்ஷா காப்­பு­றுதி திட்­டத்தின் ஊடாக நாடு­பூ­ரா­கவும் உள்ள சுமார் 45 இலட்சம் மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக காப்­பு­றுதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. குறித்த காப்­பு­றுதி திட்­டத்தின் ஊடாக  வரு­டத்­திற்கு 5 இலட்சம் ரூபா மாண­வர்­களின் சுகா­தார நல­னுக்­காக வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அரச வைத்­தி­ய­சாலை சிகிச்­சைக்­காக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா என்ற அடிப்­ப­டையில் மாதத்­திற்கு 30 ஆயிரம் ரூபா வழங்­கப்­படும். இதன் ஊடாக அரச வைத்­தி­ய­சா­லை­களில் பெற­மு­டி­யாத மருந்­துகள் மற்றும் பரி­சோ­த­னை­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் தனியார் வைத்­தி­ய­சா­லை­களின் சிகிச்­சைக்­காக 2 இலட்சம் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி தனியார் வைத்­தி­ய­சா­லையின் அறைக்கு நாள் ஒன்­றுக்கு ஐந்­தா­யிரம் ரூபா உள்­ள­டங்­க­லாக 30 ஆயிரம் ரூபாவும் வைத்­திய செல­வுக்­காக 30 ஆயிரம் ரூபா­வு­மாக மொத்­த­மாக 2 இலட்சம் ரூபா சுரக்ஷா காப்­பு­று­தியில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.மேலும் வெளி­நோ­யாளர் பிரி­வு­களில் மருந்­துகள் மற்றும் பரி­சோ­தனை பெறு­வ­தற்கு 10 ஆயிரம் ரூபா­வும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அவ­சர விபத்து காப்­பு­று­தியின் பிர­காரம் மாணவன் விபத்­தினால் உயி­ரி­ழக்கும் பட்­சத்தில் 1 இலட்சம் ரூபாவும் நிரந்­தர பாதிப்பு, இரண்டு கண் கள் பார்வை இழத்தல், இரண்டு கால்கள் இழத்தல், ஒரு கண் அல்­லது ஒரு கால் இழத்தல் ஆகி­ய­வைக்கு 50 ஆயிரம் ரூபா வும் பெற்றோர் இறந்து விட்டால் கல்வி நடவடிக்கைகளுக்கு 75 ஆயிரம் ரூபா வழங் கப்படும்.

இதன்படி குறித்த காப்புறுதியை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பாடசாலை யில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிற்பாடு வைத்திய சேவைகளுக்கு செல விட்ட பணத்தை விண்ணப்பித்து மீள பெற்றுக்கொள்ள முடியும்.