இலங்கைக்கு வரும் பயணிகள்   ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க  கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் மேலும் ,இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

ஸிகா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.