பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பித்த நாள அடைப்பு பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

06 Jul, 2026 | 03:23 PM
image

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிறக்கும் 5000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பித்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதற்கு உடனடியாக நிவாரண சிகிச்சை மேற்கொண்டாலும்.. கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மூலமாக முழுமையான தீர்வு கிடைக்கும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

குழந்தை பிறந்த முதல் நான்கு முதல் எட்டு வாரங்களுக்குள் அவர்களுடைய தோல் மற்றும் கண்களில் நிற மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் வெளியேற்றும் மலத்தில் நிறமாற்றம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு மருத்துவ மொழியில் பிலியரி அட்ரேசியா என குறிப்பிடப்படும் பித்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.

எம்முடைய கல்லீரலில் உள்ள செல்கள் பித்தம் எனும் ஒரு திரவத்தை உற்பத்தி  செய்கிறது. இது கொழுப்புகளை செரிக்க உதவுகிறது. மேலும் இவை கழிவு பொருட்களை உடலில் இருந்து அகற்றுவதற்காக.. கல்லீரலில் இருந்து குடல் பகுதிக்கு எடுத்துச் செல்லவும் உதவுகிறது. பொதுவாக பித்த நாள அமைப்பு என்பது ஒரு வகையினதான பிரத்யேக வலை அமைப்பு ஆகும். இவை இயல்பாகவும் சீராகவும் இயங்கும் போதும்... வளர்ச்சி அடையும் போதும்.... பித்தம் கல்லீரல் பகுதியில் இருந்து குடலுக்கு செல்கிறது. இத்தகைய பித்த நாள பகுதியில் துல்லியமாக விவரிக்க இயலாத காரணங்களால் பித்த நாள அடைப்பு ஏற்படும்போது... கல்லீரல் இருந்து குடலுக்கு செல்லும் பித்த ஓட்டம் தடை படுகிறது. இதனால் பித்தம் கல்லீரலுக்குள் தேக்கம் அடைந்து மஞ்சள் காமாலை எனும் நோயை உண்டாக்குகிறது. இவை கல்லீரலை பாதித்து, செயலிழக்க செய்கிறது. எனவே உயிருக்கு பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவிடும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு, மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இவர்களுக்கு பிரத்யேக குருதி பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இத்தகைய பித்த நாள அடைப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு ஹெபடோபோர்டோஎன்டெரோஸ்டோமி எனப்படும் பித்த நாள அடைப்பிற்கான நிவாரண சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சிகிச்சை முழுமையான பலனை வழங்கவில்லை என்றால்... அவர்களுக்கு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

வைத்தியர் முத்துக்குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31