இன்றைய சூழலில் எம்மில் பலரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களும் அல்லது ஏதேனும் காரணங்களால் மத்திம வயதில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும்... உறுதிப்படுத்திக் கொள்ளவும் ... தங்களுடைய அனுபவத்தின் மூலம் கற்ற விடயங்களை முழு நேர தொழிலாகவோ அல்லது பகுதி நேர தொழிலாகவோ செய்யத் தொடங்குகிறார்கள்.
ஆனால் இதில் வெற்றி பெறுவதற்கான சூட்சமத்தை இவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை, இவர்கள் கடின உழைப்பிற்கு தயாராக இருந்தாலும் வெற்றி கிட்டி, அதில் லாபத்தை பெற தொடங்குவதற்கு கடுமையாக போராடுகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு வெற்றியை எளிதாக சாத்தியப்படுத்துவதற்கான சூட்சமமான குறிப்புகளை எம்முடைய முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.
தொழில் நடத்தும் இடங்களில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீல பானு எனும் மூலிகையை நல்லதொரு அனுபவ சாலி ஒருவரின் வழிகாட்டலுடன் பெற்றுக்கொண்டு , அதனை ஒரு மஞ்சள் வண்ண சதுர வடிவிலான துணியில் கட்டி தொழில் நடத்தும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இவை ஜனவசியத்தை ஏற்படுத்தி, உங்களது தொழிலை விரிவுபடுத்தும். தொடர்ந்து நடத்தச் செய்யும்.
உடனே எம்மில் சிலர் இதற்கான முயற்சியை சிறிதளவு மேற்கொண்ட பிறகு கிடைக்கவில்லை என்று எளிதாக கடந்து சென்று விடுவார்கள். இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் மாற்று குறிப்பினையும் வழங்கி இருக்கிறார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் மற்றும் பச்சை கற்பூரத்தை சிறிதளவு வாங்கி அதனை வெண்மை வண்ண சதுர வடிவிலான துணியில் முடிச்சிட்டு, அதனை தொழில் நடத்தும் இடங்களில் வைத்தாலும் ஜனவசியம் ஏற்பட்டு தொழில் சிறக்கும். இதனை தொடர்ந்தால் உங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவு நீடித்து, வியாபாரம் செழிக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM