சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும் விளம்பரங்களை நீக்குமாறு மெட்டாவிற்கு இந்தியா உத்தரவு

06 Jul, 2026 | 02:29 PM
image

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் சிறுவர்களிடம் பாலியல் சுரண்டல் மற்றும் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் அல்லது அதற்கான வழிகளை எளிதாக்கும் அனைத்துப் கட்டண விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் தளம் இத்தகைய கொடூரமான சிறுவர் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்த கட்டணங்களைப் பெற்று அனுமதித்துள்ளது என்பது அம்பலமானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு மெட்டா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடித்தில், 

சிறுவர் பாலியல் வன்கொடுமைப் பொருட்களை ஊக்குவிக்கும் அல்லது டெலிகிராம் போன்ற வெளித்தளங்களுக்குப் பயனர்களை வழிநடத்தும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நீக்க வேண்டும்.

இத்தகைய கொடூரமான மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டண விளம்பரங்கள், தளத்தின் முன்-மதிப்பீட்டு சோதனைகளைத் தாண்டி எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து 7 நாட்களுக்குள் விரிவான விளக்கமளிக்க வேண்டும்.

இத்தகைய பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் இன்ஸ்டாகிராமில் பயனர்களுக்குக் தானாகவே பரிந்துரைத்துள்ளமை குறித்து இந்திய மத்திய அரசு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், 

சிறுவர்கள் பாலியல் சுரண்டல் மற்றும் வன்கொடுமை உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துவது அல்லது பகிர்வது ஆகியவற்றில் எங்கள் நிறுவனம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையைக் கொண்டுள்ளது. 

இத்தகைய விதிமீறல்களைக் கண்டறிய நாங்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். எங்களின் 3.5 பில்லியன் பயனர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் குற்றவாளிகள் எங்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தாண்டிச் செயல்பட முயல்கின்றனர். அவர்களுடனான தொடர் போராட்டத்தில் எங்கள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி வருகிறோம்.  

எனினும், இலாபத்திற்காகப் பாதுகாப்பு விதிகளில் சமரசம் செய்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மெட்டா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, சிறுவர்களை தவறாகச் சித்தரிக்கும் பாலியல் உள்ளடக்கங்களை வெளியிடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் மெட்டா அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பவும் இந்தியா தீர்மானித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36
news-image

கணினி, கையடக்கத் தொலைபேசிகளின் வேகத்தை அதிகரிக்கும்...

2026-08-11 11:17:38
news-image

கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன்...

2026-07-29 14:59:15
news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55