வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கின் சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மயங்கி விழுந்தவர் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த 25 வயதுடைய சிட்டி அய்ஷ்யா என்ற பெண்ணும் வியட்நாமைச் சேர்ந்த 29 வயதுடைய தேயன் தி ஹீயோங் ஆகியோர் நாமின் முகத்தில் விஷத்தன்மை வாய்ந்த இரசாயனத்தை பூசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கோலாலம்பூரில் உள்ள ஷா அலாம் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றஞ் சாட்டப்பட்ட இரு பெண்களும் நீதி மன்றில் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சமர்ப்பித்த மனுவில் இவை அனைத்தையும் தொலைக்காட்சி ஏமாற்றும் நிகழ்ச்சி என தாங்கள் எண்ணியதாகவும், வடகொரிய அதிகாரிகள் தங்களை ஏமாற்றி இதை செய்ய வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு வடகொரியா குறித்த மரணத்திற்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இரு பெண்களின் வழக்கறிஞர்களும் உண்மையான குற்றவாளிகள் மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாக தங்களது வாதங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.