இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெறும் நோக்கில் இன்றை 5 ஆவது நாளான இறுதிநாளில் களமிறங்கியுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது. 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 422ஓட்டங்களைப்பெற்று 3 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து  138 ஓட்டங்களைப்பெற்றது.

இந்நிலையில் இன்றைய ஆட்டநேர நிறைவுக்குள்  136 ஓட்டங்களைபெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி மதிய நேர இடைவேளைக்குப் பின்னர் 16 ஓட்டங்களைப்பெற்று 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணியா? பாகிஸ்தான் அணியா வெல்லப்போவதென பொறுத்திருந்து பார்ப்போம்.