செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

05 Jul, 2026 | 04:18 PM
image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய  அரங்­கேற்றம்  கடந்த  27 ஆம் திகதி  சனிக்­கி­ழமை மாலை  ஒன்றாரியோவிலுள்ள Richmondhill centre for the performing arts அரங்­கத்தில் நடை­பெற்­றது. 

கலை­ந­யமும், ஆன்­மீகச் செழு­மையும் சங்­க­மித்த நாட்­டி­யக்­க­லையின் மரபு மாறாமல் அதே­ச­மயம் சம­கால நேர்த்­தி­யுடன் கூடிய   கலை விழா­வாக நிகழ்வு அமைந்­தி­ருந்­தது.

நாட்­டிய கலா­ஷேத்­திரா நட­னக்­கல்­லூ­ரியின் அதி­பரும் சிறந்த நடன ஆசி­ரி­ய­ரு­மான தேனுஜா திரு­மா­றனின்  அர்ப்­ப­ணிப்பு மிக்க பயிற்­சி­யிலும், நட்­டு­வாங்­கத்­திலும் அரங்­கே­றிய இந்­நி­கழ்வில் அரங்­கேற்ற நாயகி செல்வி. சஞ்­சனா கிருஷான் தமது அற்­பு­த­மான அபி­நயம், நேர்த்­தி­யான அட­வுகள், அங்­க­சுத்தி, தாள­நயம் மற்றும் பாவ வெளிப்­பா­டு­களால் அரங்கில் கூடி­யி­ருந்த அனை­வ­ரையும் மெய்­ம­றக்கச் செய்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

அரங்­கேற்ற நிகழ்ச்­சிக்கு இசையால் உயி­ரூட்டும் வகையில் பாடல்­களை ஸ்ரீமான் அருண்­கோபி, வயலின் இசையை ஸ்ரீமா  மயூரன் கிரி­தரன் , புல்­லாங்­குழல் இசை­யினை ஸ்ரீமான் தயா­பரன் செல்­வ­நா­யகம்  ஆகியோர்   தங்கள் இசை நுணுக்­கங்­களால் மெரு­கூட்ட ,மிரு­தங்க இசை­யினை ஸ்ரீமான். ரதி­ரூபன் பரம்­சோதி, அரங்­கேற்ற நாய­கியின் சகோ­தரர் ஸ்ரீமான் அஷ்வின் கிருஷான் அவர் தன் குரு­வுடன் இணைந்து மிகுந்த லய­ந­யத்­து­டனும், கலைத்­தி­ற­னு­டனும் வழங்கி நிகழ்ச்­சிக்குத் தனித்­து­வ­மான சிறப்பைச் சேர்த்தார். ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு கலை­ம­ணி­களின் இந்­நி­கழ்வு அரங்கில் இருந்த அனை­வ­ரையும் பெரு­மி­தத்தில் ஆழ்த்­தி­யது.  

செல்வி. சஞ்­சனா கிருஷான் சங்­கீத வித்வான் ஸ்ரீமதி தன­தேவி மித்­தி­ர­தே­வா­விடம்   வயலின் மற்றும் வாய்ப்­பாட்டு இசையை முறை­யாகப் பயின்று வரு­வதால் இசை­யையும் நட­னத்­தையும் ஒருங்­கி­ணைத்த அவ­ரது ஆளுமை, நிகழ்ச்­சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்­தது. இவ் எல்லா சிறப்­பு­க­ளுக்கும் பெற்­றோர்­க­ளான  கிருஷான், அனந்தி  தம்­ப­தி­யி­னரின்  ஆர்­வமும், ஊக்­கமும், அர­வ­ணைப்­புமே இவ­ரது இக்­க­லைப்­ப­ய­ணத்தின் அடித்­த­ள­மாக அமைந்­தது.

இவ்­வி­ழாவில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட புகழ்­பெற்ற நடன ஆசி­ரியர் ஸ்ரீமதி சுரேக்கா ராதா­கி­ருஷ்ணன், செல்வி சஞ்­ச­னாவை மன­மாரப் பாராட்டி வாழ்த்­துரை வழங்­கினார். மேலும் சிவாச்­சாரி­யார்கள். மூத்த இசைக்­க­லை­ஞர்கள், நடன மற்றும் தமிழ் ஆசி­ரி­யர்கள், கலை ஆர்­வ­லர்கள், நண்­பர்கள், உற­வி­னர்கள் கலந்து விழாவை  எழி­லு­றச்­செய்­தனர்.

இள­மையில் கலைக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் உழைத்து, பர­த­நாட்­டி­யத்தின் பண்பாட்டு மரபை மேன்மேலும் உயர்த்திச் செல்லும் செல்வி. சஞ்சனா, செல்வன். அஷ்வின் இருவரும் கலை உலகில் மேலும் பல உயரிய சிகரங்களை எட்ட வேண்டும் என அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44