மட்டக்களப்பு மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு குறித்த ஆசிரியரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.