“எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்”

Published By: Digital Desk 7

02 Oct, 2017 | 10:25 AM
image

“நாம் இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு திட்டங்களில் ஏமாறுகின்ற போது அல்லது ஏமாற்றமடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும் ஐ.நா சபையிடம் நியாயம் கேட்பதற்கான வலிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?” என பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

"எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும் எங்களுடைய இனப்பிரச்சினையை வெல்வதற்கு அரசாங்கத்திற்கு சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் அது சரணாகதி அரசியல் இல்லை என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு நிறைய விட்டுக்கொடுப்புக்களை அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரித்ததன் காரணத்தினால் தான் இன்றைக்கு எங்களுடைய மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றக் கூடிய வசதிகள் கிடைத்துள்ளது.

கடந்த அரசு காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் இன்றைக்கு பல மாதங்களாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது ? என்பதனை சொல்லுகின்ற வரையில் தொடர்ச்சியாக நியாயமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் அது இன்றைய அரசுக்கு செய்கின்ற ஆதரவு.

இன்றைக்கு எங்களுடைய மக்களின் காணிகள் பலவற்றை இராணுவம் சூரையாடியுள்ளது அந்த நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.

எமது மக்களுக்கு இந்த துணிச்சல் வந்தது இன்றைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தம் இனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய பல விடயங்களை தாண்ட வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கத்திற்கு  வெளியிலிருந்து கொண்டு செய்கின்ற ஆதரவுகள் தான் எங்களுடைய போராட்டங்களை மேலே  கொண்டு வர வைத்துள்ளது என்பதனை யாரும் மறந்து விட முடியாது” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08