ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண் புற்றுநோய் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

04 Jul, 2026 | 03:11 PM
image

பிறந்த பிள்ளைகளில் சிலருக்கு மிக அரிதாக ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது இன்ட்ரா- ஒர்ட்ரியல் கீமோதெரபி எனும் நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு பார்வை திறன் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மருத்துவ மொழியில் ரெட்டினோபிளாஸ்டோமா என குறிப்பிடப்படும் கண் புற்றுநோய் பாதிப்பு‌ -  எம்முடைய விழி திரையில் உள்ள செல்கள் இயல்பை விட கூடுதலாக வளர்ச்சி அடைவதால் ஏற்பட தொடங்கும் புற்றுநோய் பாதிப்பாகும். விழி திரை என்பது கண்ணின் உட்புறத்தில் உள்ள ஒளியை உணரும் படலமாகும்.

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் பாதிப்பு பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பொதுவாக இரண்டு வயதிற்குள் இத்தகைய பாதிப்பு கண்டறியப்படுகிறது. இவை பெரும்பாலும் ஒரு கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெகு அரிதாகவே இரண்டு கண்களிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஒளியை பார்த்தால் கண் கூச்சம், கண் சிவத்தல், வீக்கம், பார்வை திறன் குறைபாடு... ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். கண்களில் உள்ள செல்களின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படும் போது இத்தகைய பாதிப்பு உண்டாகக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய அரிய வகை கண் புற்றுநோய் பாதிப்பு பொதுவாக உடலின் வேறு பகுதிகளுக்கு பரவுவதில்லை. இருப்பினும் இதற்கு உரிய வகையில் சிகிச்சை பெற்றால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். சில தருணங்களில் ஒரு கண்ணில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய ரெட்டினோபிளாஸ்டோமா மற்றொரு கண்ணுக்கும் பரவக் கூடும். இதனால் இதற்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இத்தகைய தருணங்களில் கீமோதெரபி சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும், தற்போது அறிமுகமாகி இருக்கும் இன்ட்ரா- ஒர்ட்ரியல் கீமோதெரபி எனும் நவீன சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்திருக்கும் செல்கள் மீது துல்லியமாக பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை செலுத்தி முழுமையான நிவாரணத்தை வழங்கி, பார்வையை பாதுகாக்கவும் ... மீண்டும் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வைத்தியர் வித்யா தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31