எம்மில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய தகுதியையும், திறமையையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வருகிறார்கள். ஆனால் அதற்குரிய அங்கீகாரம், பதவி உயர்வு, சம்பள உயர்வு ,மாற்றங்கள் என எந்த முன்னேற்றங்களோ மாற்றங்களோ ஏற்படாமல் ஒரே நிலையில் தேக்கமடைந்தது போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் பாவிக்கும் போது மாற்றங்களும்... அதனூடாக முன்னேற்றங்களும் சாத்தியமாகும் என்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : சிவப்பு அல்லது ஓரஞ்சு வண்ணத்தில் சதுர வடிவிலான துணி, தேங்காய், தேன், மெழுகு. பேப்பர் அல்லது சிறிய தாயத்து.
நன்றாக உள்ள ஒரு தேங்காயை வாங்கி அதன் மூன்று கண்களில் ஒரு கண்ணை அழகாக துருவி எடுத்து, அதில் இருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும். அந்த தேங்காயில் தேனை ஊற்ற வேண்டும். அதனுடன் பேப்பர் அல்லது சிறிய தாயத்து ஒன்றில் உங்களுடைய- நீங்கள் விரும்பும் மாற்றம் ( பதவி உயர்வு இடமாற்றம் ,ஊதிய உயர்வு மற்றும் மாற்றங்கள் குறித்த) தொடர்பான குறிப்புகளை எழுதி, அதனை தேங்காய்க்குள் வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்தத் தேங்காயை மெழுகால் மூடி, அந்த தேங்காயை சிவப்பு அல்லது ஓரஞ்சு வண்ண துணியில் கட்டி, அதனை உங்களுடைய வீட்டின் அல்லது ஆற்றல் மிகுந்த அறையின் தென்மேற்கு மூலை பகுதியில் வைத்து விட வேண்டும்.
மனதில் மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையுடன் நாளாந்தம் பூஜை அறையில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினால்... விரைவில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேறுவீர்.
தொகுப்பு : சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM