உமா­ஓயா திட்­டத்தின் கார­ண­மாக ஏற்­பட்­டு­ வரும் பாதிப்­பு­களை கருத்திற் கொண்டு திட்­டத்துக்கு அண்­மித்­த­தாக வசிக்கும் சுமார் ஐயா­யிரம் குடும்­பங்­களை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காப்­பாக வாழ சிறிய நக­ர­மொன்றை உரு­வாக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Image result for உமா ஓயா virakesari

உமா ஓயா சுரங்க வேலைத்­திட்டம் முன்னெடுக் கப்பட்டதில் இருந்து பதுளை, பண்­டா­ர­வளை மற்றும் மொன­ரா­கலை ஆகிய பகு­தி­களில் அதி­க­ளவில் மக்கள் பாதிக்­கப்­ப­ட்டு­ வ­ரு­கின்­றனர். மண்­ச­ரி­வுகள், நீர் நிலைகள் வற்­றிப்­போதல் மற்றும் வாழ்­வா­தார பாதிப்­புகள் உள்­ளிட்ட  அப்­ப­கு­தியில் பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது.பொது­மக்கள் பாதிக்­கப்­படும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் மிகவும் சிர­மப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர். இப்­ப­கு­தியில் வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்த நிலையில் உமா ஓயா திட்­டத்தால் ஏழா­யி­ர­த்திற்கும் அதி­க­மான  வீடுகள் வெடிப்­புக்­குள்­ளாகி பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் மேலும் பல பகு­தி­களில் சேதங்கள் தொடர்­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் உள்ள பொது­மக்­க­களை  அகற்ற அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

இந்­நி­லையில் முதற்­ கட்­ட­மாக  பதுளை மாவட்­டத்தில் 5000 குடும்­பங்­களை அகற்­று­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்­மு­கா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மாவட்­டத்தில் காணி தட்­டுப்­பாடு நில­வு­வ­துடன், புதிய வேலைத்­திட்­டங்­களின் கீழ் வீடு­களை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ள­தா­கவும்  இதன் பிரகாரம், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறியநகரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்