மீட்ஷல் ஜோன்சன் தனக்கு ஓய்வு பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தோடு மீட்ஷல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

நியூசிலாந்திற்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் பேர்த் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மீட்ஷல் ஜோன்சன் வீசிய 28 ஓவர்களில் 157 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கட்டை மாத்திரமே பெற்றார். பேர்த் மைதானத்தில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டப்பிரதி இதுவே.


மேலும், இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர். 73 டெஸ்ட் போட்டியில் 311 விக்கட்டுக்களையும், 153 ஒரு நாள் போட்டிகளில் 239 விக்கட்டுக்களையும், 30 இருபதுக்கு இருபது போட்டிகளில் 38 விக்கட்டுக்களையும் தம் அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார். 


இலங்கைக்கு எதிராக அவுஸ்ரேலியாவின் பிர்ஸ்மன் மைதானத்தில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.