எம்மில் சிலர் விபத்தில் சிக்கும் போது எதிர்பாராத விதமாக முழங்கை பகுதியில் எலும்பு முறிவு பாதிப்பை எதிர்கொண்டிருப்போம். இதில் சிலருக்கு முழங்கை எலும்பு பகுதியின் கூர்மையான முனை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும். இதனை மருத்துவ மொழியில் ஓலக்ரானன் எலும்பு முறிவு என குறிப்பிடப்படுகிறது. இதற்கு பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாம் நாளாந்தம் எம்முடைய கைகளை மேலும் கீழும் உயர்த்துவதற்கும்... பக்கவாட்டு பகுதியில் நீட்டுவதற்கும்... முன் கையை சுழற்றுவதற்கும்... முழங்கை மூட்டு பகுதியில் கூர்மையான பகுதியில் உள்ள எலும்புகள் உதவுகிறது. அத்துடன் எம்முடைய முழங்கை பகுதியில் உள்ள மூட்டு மூன்று வகையினதான எலும்புகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டால்.. வலியை தாங்கிக் கொள்ள இயலாது.
முழங்கை பகுதியை சுற்றிலும் வீக்கம் , ரத்தக் கசிவு, கடுமையான வலி, கையை அசைக்க முடியாத நிலை, அசைத்தால் தாங்கிக் கொள்ள இயலாத வலி.. ஆகிய அறிகுறிகள் இருந்தால், உங்களுடைய முழங்கை பகுதியின் கூர்மையான முனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
இத்தகைய பாதிப்பை வைத்தியர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிந்து, அங்குள்ள மூட்டுகள் நகராமல் இருப்பதற்கான பிரத்யேக சிகிச்சையை நிவாரணத்திற்காக உடனடியாக மேற்கொள்வார்கள். இந்த தருணத்தில் சிலர் பிரத்யேக உறைகளையும் அணிய வேண்டியதிருக்கும். இதனை தொடர்ந்து பாதிப்பினை பிரத்யேக பரிசோதனை மூலம் அவதானித்து, சிறிய அளவிலான சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். அதனைத் தொடர்ந்து கைகளின் இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய இயன்முறை சிகிச்சையையும் வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
வைத்தியர் ராஜ் கண்ணா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM