திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

03 Jul, 2026 | 04:32 PM
image

எம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கை நிலை மாறுபட்டாலும்... அவர்களின் சிந்தனையும், பார்வையும் வித்தியாசமாக இருந்தாலும்... திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க தவறுவதில்லை.

பெற்றோர்களின் ஆசியுடனும்,  அனுமதியுடனும் தான் தங்களுடைய இல்வாழ்க்கைக்கான துணையை தெரிவு செய்கிறார்கள். இந்நிலையில் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாலும்.. அவர்களுக்கு ஏதேனும் தடையோ தாமதமோ தொடர்ந்தால்... அது தொடர்பாக அவர்கள் தங்களுடைய மன வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், பெற்றோர்கள் விவரிக்க இயலாத துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

இந்நிலையில் எம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் திருமணத்தடையை நீங்குவதற்கு ஆன்மீக முன்னோர்கள் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய சில பிரத்யேக வழிமுறைகளை பட்டியலிட்டு வழங்கியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரை தருணமான காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகத்திற்கும் , செவ்வாய் பகவானுக்கு அல்லது செவ்வாய் அம்சம் கொண்ட முருக பெருமானுக்கு சிறிய அளவிலான செப்பு தகடு ஒன்றினை தானமாக வழங்கிடுங்கள்.

அத்துடன் செவ்வரளி பூவை சாற்றி, அங்காரகனை வழிபடுங்கள். அதனைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து வீடு திரும்பும் போது அல்லது ஆலயத்திற்கு செல்வதற்கு முன் ஒரு கிலோ துவரம் பருப்பு அல்லது துவரம் பருப்பினால் தயாரிக்கப்பட்ட உணவு பொருளை யாருக்கேனும் தானமாக வழங்கிட வேண்டும்.

அத்துடன் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்திற்கு பிரத்யேக அபிஷேக அலங்காரங்களை செய்து,  அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அந்த ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து திருமணம் செய்து கொள்ள விரும்பும் வரன் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களது பாதம் பணிந்து வணங்கிட வேண்டும்.

இதனை மேற்கொள்ளும் போது திருமணத்திற்கான தடை அனைத்தும் விலகி, விரும்பிய வரன் கிடைத்து இனிமையான இல்லற வாழ்க்கை அமையும்.

தொகுப்பு: சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31