இன்றைய சூழலில் எம்மில் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமான உணவை பசியாற வேண்டும் என்பதிலும், பசித்த பிறகே புசிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் சிலருக்கு சில தருணங்களில் குறிப்பாக விருந்துகளில் பங்கு பற்றும் போது அங்குள்ள சுவையான உணவுகள் மீதான தீராத ஆசையின் காரணமாக அதிக அளவில் பசியாறுகிறார்கள்.
இதன் காரணமாக அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் வலி, அஜீரணம், உப்புசம்.. போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மருத்துவ மொழியில் டிஸ்பயோசிஸ் என குறிப்பிடப்பட்டு, அதற்கு நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் அனைவருக்கும் எம்முடைய குடல் பகுதியில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களும், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் உள்ளன என்பதை அறிவர். சில தருணங்களில் சில வகையினதான உணவுகளை பசியாறுவதால் வயிறு உப்புசம் ஏற்படுகிறது என கருதி, பலரும் உணவை தவிர்ப்பர். ஆனால் அத்தகைய வயிறு உப்புசம் எனும் பாதிப்பு உணவால் ஏற்படுவது அல்ல.
உங்களுடைய உடல் பகுதியில் உள்ள இரண்டு வகையினதான அதாவது நன்மை மற்றும் தீமை அளிக்கக்கூடிய பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் உண்டாகும் சமச்சீரற்ற நிலையால் உருவாகிறது. இதன் காரணமாக வயிறு உப்புசம் , வயிறு வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு மருத்துவ மொழியில் கட் டிஸ்பயோசிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
எம்முடைய வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களில் தீமையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாவதால்.. இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய குடல் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படும் போது அதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால்... கடுமையான வயிறு மற்றும் குடல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அத்துடன் நோய் எதிர்ப்பு மண்டலம்- நாளமில்லா சுரப்பி மண்டலம்- நரம்பு மண்டலம் ஆகியவற்றிலும் சிக்கலை உண்டாக்கும்.
ஈறுகளில் இரத்தக் கசிவு, பற்களில் பாதிப்பு, முகப்பரு, வயிறு உப்புசம், வெளியேற்றும் மலத்தின் நிற மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல், அரிப்பு ஆகியவை ஏற்பட்டால். உங்களுடைய குடலில் உள்ள நுண்ணுயிரிகள் சமநிலையில்லாமல் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டு , அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் வைத்தியர் வழங்கும் மருந்தியல் சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
வைத்தியர் செந்தில்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM