யக்கலமுல்ல, மானகந்துர பிரதேசத்தில் அதிசயமான வகையில் காளான் ஒன்று வளர்ந்துள்ளமையானது அப்பகுதியிலுள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் தொலமுல்ல சுனில் என்பவரின் வீட்டிற்கு அருகிலேயே குறித்த அதிசயக் காளான் வளர்ந்துள்ளது.

இந்த காளானின் உயரம் சுமார் 5 அடி  உயரமாக உள்ளது. காளானில் சுமார் 60 வரையான இதழ்கள் காணப்படுகின்றன.

குறித்த காளான் கடந்த 2 மாத காலமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.