சர்வதேச வர்த்தகநாம ஆலோசனை நிறுவனமான Interbrand அண்மையில் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான தனது வர்த்தகநாம தரப்படுத்தல் அறிக்கையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த வர்த்தகநாமங்களின் தரப்படுத்தலில் 70 ஆவது ஸ்தானத்திற்கு Huawei எழுச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகநாமப் பெறுமதி தொடர்பில் 14 வீத வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளதுடன், 6,676 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை எட்டியுள்ளது.
முதல் 100 ஸ்தானங்களைப் பிடித்துள்ள வர்த்தகநாமங்களின் பட்டியலில் வர்த்தகநாமப் பெறுமதி தொடர்பில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடையப்பெற்றுள்ள 16 வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் அது திகழ்கின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடு, ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு நேர்மை என்ற வர்த்தகநாம கோட்பாட்டின் மீது நிறுவனம் கொண்டுள்ள அதீத நம்பிக்கை ஆகிய அதன் பிரதான விழுமியங்களே Huawei இன் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பின்னாலுள்ள முக்கியமான காரணங்களாகும்.
“கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாம் அடிப்படையில் எமது வர்த்தகநாமத்தின் விழுமியங்களைப் பேணி வந்துள்ளதுடன், புத்தாக்கமான தொழில்நுட்பங்கள், அதியுயர் தர உற்பத்திகள் மற்றும் முதன்மையான சேவைகள், தீவிர ஆர்வ உணர்வும்,முற்போக்கும் கொண்ட ஊழியர்கள் ஆகியவற்றின் துணையுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் வெற்றி கண்டுள்ளோம்” என்று Huawei வர்த்தக சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான கெவின் ஜாங் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM