(எஸ்.ரவிசான்)

எமது நாட்டின் பெருபான்மை சமூகமான சிங்கள இனத்தை அடிமைப்படுத்தி இனவாத குழுக்கள் உட்பட புலம்பெயர் தமிழ் மக்களின் தேவைக்கு ஏற்ப நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் இந்த அரசின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு வெகுவிரைவில் முடிவு கட்டுவோம் என பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட ஒன்றினைந்த கூட்டு கட்சியான ஐக்கிய சிங்கள மக்கள் முன்னணி தெரிவித்தது.

இந்நாட்டில் பௌத்த தர்மம் உட்பட எமது இராணுவ வீரர்களை பாதுகாக்க நாம் முற்படும்போது அரசானது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோத முறையில் எம்மை அடக்க முயற்சிக்கின்றது என ஐ.சி.ம. முன்னணியின் செயலாளர் நாத் அமரகோன் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.