ஆப்பிள் நிறுவனமானது செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தனது 3 புதிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

iPhone 8, iPhone 8 Plus மற்றும் iPhone X ஆகிய கையடக்கத்தொலைபேசிகளை உலகிற்கு அறிமுகம் செய்திருந்தது.

இவற்றின் விலை முறையே 699 டொலர்கள், 799 டொலர்கள் மற்றும் 999 டொலர்களாக இருக்கின்றது.

iPhone X இல் காணப்படும் பல அம்சங்கள் iPhone 8 இலும் காணப்படுகின்ற அதேவேளை, iPhone X ஆனது iPhone 8 இலும் பார்க்க விலை அதிகமானதாக இருக்கின்றது.

இதனால மக்கள் பெருமாளவில் iPhone 8 ஐ கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆப்பிள் அறிமுகப்படுத்திய 3 வகையான கையடக்கத்தொலைபேசிகளிலும்  A11 எனும் ஆப்பிளின் புதிய புரசசரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் iPhone 8 இல் Touch ID தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் iPhone X இல் Face ID  எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் Face ID என்ற தொழில்நுட்பமானது பரீட்சியம் இல்லாததால் அதனை கையாள்வது கடினமாக காணப்படுகின்றது.

ஆப்பிளின் 3 வகையான கைப்பேசிகளும் Qi வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் ஒரே வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடியதாக இருக்கின்றதுடன் ரியர் கமெராக்களை கொண்டுள்ளன.

புதிய சில வசதிகளைக் கொண்ட வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெராவினை உள்ளடக்கியுள்ளன.

iPhone 7 இன் வெளிப்புற கவர் (Cases) ஆனது iPhone 8 உடன் பொருந்துகின்றமையால் தேவையேற்படின் அதனை மாற்றி உபயோகிக்க முடியும்.