(ஆர்.யசி)

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் பங்குகொள்ளும் 8வது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொளும் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் நாளை மறுநாள் இலங்கை வந்தடைவார்கள். 

எதிர்வரும் 4 ஆம் திகதி  தொடக்கம்  6 ஆம் திகதிவரை  சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினரின் 8வது மாநாட்டு கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையினை நிகழ்த்தி மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.