அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக வழங்கி சுகாதாரத் துறைக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் பெஷன் பக்

01 Jul, 2026 | 06:05 PM
image

பெஷன் பக் நிறுவனம் தமது வணிகத்திற்கு அப்பால், சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கங்களை ஏற்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில், அண்மையில் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் இருதய ஆய்வுகூடத்திற்கு (Cardiac Catheterisation Laboratory) சத்திரசிகிச்சை அஞ்சியோகிராம் கவசங்களை (Theatre angiogram covers) நன்கொடையாக வழங்கியுள்ளது. இவ்வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டங்களின் ஒரு அங்கமாக 2026 மார்ச் 30ஆம் திகதி வைத்தியசாலை வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Cardiac Catheterisation Laboratory ஆய்வுகூடமானது இருதய நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் பலவிதமான கண்டறியும் செயற்பாடுகள் மற்றும் இடையீட்டு நடைமுறைகளை எளிதாக்கும் வைத்தியசாலையின் ஒரு முக்கிய பிரிவாகும். அந்த வகையில், சுகாதார நிறுவனங்களுக்கு அவசியமான அத்தியாவசிய வளங்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும், வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தை வலுப்படுத்தவும் 50 பொதிகள் கொண்ட சத்திரசிகிச்சை அஞ்சியோகிராம் கவசங்களை பெஷன் பக் வழங்கியுள்ளது.

இது குறித்து. பெஷன் பக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஷபீர் சுபியான் தெரிவிக்கையில், பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, சமூகத்திற்கு ஒப்பிட முடியாத சேவையை சுகாதார வல்லுநர்கள் வழங்கி வருகிறார்கள் என்றார். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வைத்திய பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை இவ்வர்த்தகநாமம் நன்கு உணர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நன்கொடையானது மருத்துவ சமூகம் மீதான இவ்வர்த்தகநாமத்தின் பாராட்டையும் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையாளர்களில் ஒன்றான பெஷன் பக், நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. நிலைபேறான வணிக வளர்ச்சியானது, தேசிய வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை கொண்டதாக இருக்க வேண்டும் எனும் பெஷன் பக்கின் நம்பிக்கையை இதுபோன்ற திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் கலாநிதி எஸ்.எச்.எம். பராஸ் தெரிவிக்கையில், இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், சமூகத்திற்கு பெறுமதியான மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு பங்களிக்கின்ற முயற்சிகளை மேற்கொள்வதில் பெஷன் பக் தொடர்ச்சியாக உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம், ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு சேவை செய்யும் ஒரு சுகாதார நிறுவனத்திற்கு, நடைமுறை ரீதியான ஆதரவை வழங்க இவ்வர்த்தகநாமம் அதன் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

சமூகப் பொறுப்புணர்வு தொடர்பில் நீண்டகால அர்ப்பணிப்பைக் கொண்டுள்ள பெஷன் பக் நிறுவனம், வாழ்க்கையை மேம்படுத்துகின்ற, சமூகங்களை வலுவூட்டுகின்ற மற்றும் நாட்டின் நிலைபேறான வளர்ச்சிக்கு பங்களிக்கும் முயற்சிகளை ஆதரிப்பதில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18
news-image

பணப் பாவனையற்ற டிஜிட்டல் இலங்கைக்கு வலுசேர்க்கும்...

2026-06-25 15:08:16