'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025' ஊக்குவிப்புத் திட்டத்தில் 5 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கி கௌரவிப்பு

01 Jul, 2026 | 04:49 PM
image

'கொட்டகல கஹட்ட' வர்த்தகநாமம், நாடு முழுவதுமுள்ள தனது விசுவாசமான நுகர்வோரை உற்சாகப்படுத்தும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரச வாசனா 2025’ (ரச வாசனா 2025) நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அதன் பிரமாண்டமான பரிசு வழங்கும் விழாவை அண்மையில் கொழும்பு கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் நடத்தியது.

இந்நிகழ்வில் 5 வெற்றியாளர்கள் புத்தம் புதிய TVS Scooty Pep மோட்டார் சைக்கிள்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டனர். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் வெற்றிகரமான நிறைவானது, நுகர்வோரின் விசுவாசத்தை கௌரவித்துப் பாராட்டுவதிலும், நாடு முழுவதுமுள்ள வீடுகளில் உள்ளவர்களுடனான தனது நீண்டகாலத் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதிலும் கொட்டகல கஹட்ட கொண்டுள்ள அர்ப்பணிப்பின் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது.

‘கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025’ ஊக்குவிப்புத் திட்டம் 2025 ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது. நுகர்வோர் எந்தவொரு அளவிலான கொட்டகல கஹட்ட தேயிலைப் பொதியின் வெற்று உறையை தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கத்துடன் தபால் பெட்டி இல. 161, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்பிரசாரத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், நுகர்வோருடன் நேரடியாக இணையவும் கொட்டகல கஹட்டவின் பிரசார வாகனங்கள் நாடு முழுவதுமுள்ள 20 மாவட்டங்களில் உள்ள 120 நகரங்களுக்குப் பயணித்தன. இதன் காரணமாக, கொட்டகல கஹட்ட நுகர்வோர் தங்களது விபரங்களை வர்த்தகநாமத்தின் பிரசார வாகனங்கள் மூலமும் நேரடியாக சமர்ப்பிக்க முடிந்தது. இது நாடு முழுவதுமுள்ள தேநீர் பிரியர்களின் பெரும் பங்கேற்பையும் உற்சாகமான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது.

‘ரச வாசனா’ ஊக்குவிப்புத் திட்டமானது, பல வருடங்களாக கொட்டகல கஹட்ட வர்த்தகநாமம் மீது தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களைப் பாராட்டும் ஒரு பிரதிபகார செயற்பாடாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இப்பிரச்சாரத்தின் வெற்றி குறித்து C.W. Mackie PLC குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி Chief Marketing Officer நிஷா கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “‘கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025’ ஊக்குவிப்புத் திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பானது, நுகர்வோர் எமது வர்த்தகாநமம் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பிரதிபலிக்கிறது. 5 வெற்றியாளர்களுக்கு TVS Scooty Pep மோட்டார் சைக்கிள்களைப் பரிசாக வழங்கியதில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், இந்த வருடத்தின் ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்ற அனைத்து நுகர்வோருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இலங்கைச் சந்தைக்கு 2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொட்டகல கஹட்ட, அதன் உயர்ரக நிறம், தனித்துவமான சுவை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் ஆகியவற்றால் நுகர்வோரிடையே படிப்படியாகப் பிரபலமடைந்து வளர்ந்துள்ளது. தரமான இலங்கைத் தேயிலையை (Ceylon Tea) பயன்படுத்தி கவனமாகத் தயாரிக்கப்படும் இவ்வர்த்தகநாமம், சீரான தரம் மற்றும் மதிப்பை வழங்குவதில் நற்பெயரை பெற்றுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள தேநீர் அருந்தும் வீடுகளில் விருப்பமான தெரிவாக மாறியுள்ளது. ‘ரச வாசனா’ போன்ற ஊக்குவிப்புத் திட்டங்களின் மூலம், சந்தையில் தனது இருப்பை கொட்டகல கஹட்ட வலுப்படுத்தி வருவதோடு, தேநீர் பிரியர்களுடன் நீடித்த உறவுகளையும் கட்டியெழுப்பி வருகிறது.

120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட C.W. Mackie PLC நிறுவனமானது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தனது பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

இந்த பன்முகப்படுத்தப்பட்ட வணிக குழுமத்தின் வேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவான Scan Products பிரிவு, பாரம்பரிய வர்த்தகம், நவீன வர்த்தகம், HORECA (ஹோட்டல், உணவகம், உணவளிப்பு) விநியோக வழிகள் மற்றும் நிறுவன ரீதியான விநியோகம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நுகர்வோரைக் கொண்ட சந்தைகளுக்குள் நுழைய கலப்பு ரீதியான நேரான சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. அதன் தயாரிப்பு வரிசையில் Sunquick, Scan Jumbo Peanuts, Scan Snacks, Kotagala Kahata, Muthu Kahata, Delish Jelly, Scan வர்த்தகநாம குடிநீர் போத்தல், KVC தயாரிப்புகள் (பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள்), N-Joy தேங்காய் எண்ணெய், Star Brand Essences and Colourings போன்ற நன்கு பிரபலமான வர்த்தகநாமங்கள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் அந்தந்த பிரிவுகளில் சந்தையில் முன்னணி தயாரிப்புகளாக உருவெடுத்து, இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. நம்பகமான வர்த்தகநாமங்களின் வலுவான தளம் மற்றும் விரிவான விநியோக வலையமைப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதில் இந்நிறுவனம் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18
news-image

பணப் பாவனையற்ற டிஜிட்டல் இலங்கைக்கு வலுசேர்க்கும்...

2026-06-25 15:08:16
news-image

“Shakira Live in Kandy 2026”,...

2026-06-08 15:19:26