எம்மில் சிலர் காலணி அணிந்து நடை பயிற்சி மேற்கொள்ளும் போது குதிகாலில் வலி ஏற்படுவதை உணர்ந்திருப்பர். வேறு சிலர் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குதிகால் பகுதியில் பொறுக்க இயலாத வலியால் அவஸ்தைப்படுவதையும் பார்த்திருக்கலாம். இவை மருத்துவ மொழியில் அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனப்படும் காலில் உள்ள தசை நார் பகுதியில் ஏற்படும் வீக்க பாதிப்பாகும். இதற்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை கண்டறியப்பட்டு, நிவாரணம் அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடலில் உள்ள மிகப்பெரிய தசை நார் பகுதி- கெண்டைக்கால் தசைகளை குதிகால் எலும்புடன் இணைக்கிறது. நீங்கள் நடக்கும் போதும்... மாடிப்படிகட்டுகளில் ஏறும் போதும்... குதிக்கும் போதும்...ஓடும் போதும்... ஏற்படும் அழுத்தங்களை தாங்க கூடியது இந்த அகில்லெஸ் தசை நார் பகுதியாகும். இவற்றை இயல்பான அளவை விட கூடுதலாக பாவித்தால்.. அங்கு வீக்க பாதிப்பு ஏற்படுகிறது. இதைத்தான் அகில்லெஸ் டெண்டினிடிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
நாளாந்தம் ஐந்து கிலோ மீற்றர் தொலைவு தூர நடை பயிற்சியை திடீரென்று எட்டு கிலோமீற்றர் அளவிற்கு உயர்த்துவது... காலணிகளை திடீரென்று மாற்றுவது... குதிகால்களை இயல்பான அளவைவிட கூடுதலாக பாதிப்பது ...போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
குதிகால் வலி, குதிக்கால் பகுதியில் அசௌகரியம், காலணி மாற்றி அணிந்தாலும் குதிகாலில் வலி.. ஆகியவை இதன் முதன்மையான அறிகுறியாகும். இத்தகைய பாதிப்புடன் வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் எக்ஸ்ரே - எம் ஆர் ஐ ஸ்கேன் - அல்ட்ரா சவுண்ட் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். பெரும்பாலான தருணங்களில் கட்டாய ஓய்வு குறிப்பாக மூன்று மாத அவகாசத்திற்கான கட்டாய ஓய்வு சிலருக்கு இதற்கு நிவாரணமாக அவசியப்படலாம். இதனைத் தொடர்ந்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவும் இதனை கட்டுப்படுத்துவார்கள் அத்துடன் பிரத்யேக காலணிகளையும், கால் உறைகளையும் அணிய வேண்டியதிருக்கும். சிலருக்கு மட்டும் இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்க சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கேஸ்ட்ரோக்னீமியஸ் ரிசெஷன் எனும் நவீன சத்திர சிகிச்சை மூலமாகவும் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
வைத்தியர் அருள் ஜோதி தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM