இன்றைய சூழலில் எம்மில் பலரும் திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் திட்டமிட்டு தான் தங்களுடைய வாரிசுகளை உருவாக்குகிறார்கள். சிசு வயிற்றில் இருக்கும் தருணத்திலேயே பிறக்கப் போகும் பிள்ளைக்காக பெயரை தெரிவு செய்கிறார்கள்.
ஆனால் குழந்தை பிறந்தவுடன் தங்களுக்கு தெரிந்த சோதிட நிபுணர்களிடம் , நிபுணர்களை அணுகி இந்த நேரத்தில் பிரசவம் நிகழ்ந்திருக்கிறது. ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை பிறந்திருக்கிறது... எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது... என்பதனை அதீத ஆர்வத்தின் மூலம் தெரிந்து கொள்கிறார்கள் . ஆனால் இது தவறு என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக குழந்தை பிறந்து பதினோரு நாட்கள் கழித்து அஸ்வினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திர நாள் வரும் தருணத்தில் பிறந்த பிள்ளைக்கான ஜாதகத்தை அவதானித்து எழுதலாம். அதன் பிறகு பெயரை சூட்டலாம். இது ஒரு முறை.
வேறு சிலர் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு தான் பாரம்பரிய சடங்குகளை செய்து தொட்டிலில் இடம்பெறச் செய்து அதன் பிறகு அப்பிள்ளைக்கான ஜாதகத்தை எழுதி, அதன் பிறகு பெயரை சூட்டுவார்கள் இது ஒரு முறை.
இந்த இரண்டைத் தவிர வேறு எதனையும் பின்பற்ற வேண்டாம் என ஆன்மீக முன்னோர்களும், சோதிட நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். பதினோரு நாட்களுக்குப் பிறகும்.... ஒரு மாதத்திற்கு பிறகும்... பிறந்த பிள்ளைக்கான ஜாதகத்தை அவதானித்து எழுதுவதன் பின்னணியில்.... அந்தப் பிள்ளையின் பெற்றோர்களுக்கு ஏதேனும் சோதிட ரீதியிலான நவகிரகங்களின் அசுப பலன் தொடர்பான நெருக்கடிகள் இருக்கிறதா ? என்பதை சோதிட நிபுணர்கள் அவதானிப்பார்கள். எனவே பெற்றோர்கள் -ஆன்மீக முன்னோர்களும், சோதிட நிபுணர்களும் இது தொடர்பாக வழங்கும் பரிந்துரையை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM