ஒருசில புத்த பிக்குகளின் ஒழுங்கீனமற்ற, முறையற்ற நடவடிக்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த பௌத்த சமூகத்துக்குமே இழுக்கு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் கடல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கல்கிஸையில் ரோஹிங்யா அகதிகளை பிக்குகளும் மற்றும் சிலரும் சேர்ந்து பயமுறுத்தியதுடன் அங்கிருந்து துரத்தியடித்தமை குறித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இதுபோன்ற மதவாதம் பிடித்த சிலரின் நடவடிக்கைகளால், பிக்குகளின் மீதான மதிப்பை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நம் நாட்டின் ஏனைய சமயத் தலைவர்களை உதாரணமாகக் கொண்டு பௌத்த பிக்குகள் தமக்கும், தமது சமயத்துக்கும் பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டும்” என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.