இன்றைய சூழலில் எம்மில் பலரும் அலுவலகத்தில் பணியாற்றினாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் தாகம் எடுத்து சில நிமிட இடைவெளிக்கு பிறகு தான் குறைவான அளவிற்கு தண்ணீரை பருகுகிறார்கள். இதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது உடன் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு வேறு பல காரணங்களால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகலாம். வைத்தியசாலையில் பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ளும் போது சிறுநீரகத்தின் பல்வேறு இடங்களில் சிறுநீரகக் கற்கள் உருவாகி இருக்கக்கூடும் . இதனை தற்போது கண்டறியப்பட்டுள்ள ECIRS எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் எளிதாக அகற்றலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட்டால்.. அவர்களுக்கு சாவி துவார சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். ஆனால் நோயாளிக்கு சிறுநீரகத்தின் பல பகுதிகளில் கற்கள் இருந்தால்... அதனை ஒரே அமர்விலான சத்திர சிகிச்சை மூலம் அகற்ற இயலாது. இந்நிலையில் ECIRS - Endoscopic Combined Intra Renal Surgery - எண்டாஸ்கோபிக் கம்பைன்ட் இன்ட்ரா ரீனல் சரஜேரி எனப்படும் நவீன நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.
இத்தகைய தருணத்தில் சிறுநீரகத்தின் பக்கவாட்டு மற்றும் கீழ் புறத்தில் இருந்து அதாவது சிறுநீர் வெளியேறும் பாதை வழியாக இரண்டு பிரத்யேக கருவிகளை உள்ளே செலுத்தி, சிறுநீரகத்தின் பல இடங்களில் உள்ள கற்களை அகற்றுகிறார்கள். இதன் மூலம் நோயாளிக்கு விரைவான நிவாரண சிகிச்சை வழங்கப்படுவது உறுதியாகிறது. மேலும் இத்தகைய நவீன சத்திர சிகிச்சை மூலம் பத்து அல்லது பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுநீரக கற்களை ஒரே சத்திர சிகிச்சை மூலமாக அகற்ற முடியும். அதற்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால்... மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் தீபக் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM