கோழிகள் முட்­டை­யிட, சேவல் தேவை­யில்லை என்­பது, உங்­களில் எத்­தனை பேருக்குத் தெரியும்? 

தாயின் பாலைக் குடித்து வளரும் பாலூட்­டி­களைப் போன்று, கோழி­க­ளிலும் கருக்­கட்­டாத முட்­டைகள் சூல­கத்­தி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக வெளிப்­படும். இந்த கருக்­கட்­டாத 'கரு­முட்டை'கள் சேவல் மிதிக்­கும்­போது வெளி­வரும் விந்­து­க­ளுடன் சேர்ந்தால், அவை கருக்­கட்­டிய முட்­டை­க­ளாக வெளி­யேறும். சேவலின் விந்­து­க­ளுடன் சேரா­தவை கருக்­கட்­டாத முட்­டை­க­ளாக உருக் கொள்ளும். இந்த முட்­டைக்குள் கரு – உயிர் இருக்­காது. பேட்டுக் கோழி­களை வெட்­டும்­போது உள்ளே வட்­ட­வ­டிவ சின்னச் சின்ன மஞ்சள் நிற முட்­டைகள் இருப்­பதைக் கண்­டி­ருப்­பீர்கள். சேவல் கோழி, பேட்டுக் கோழியை மிதிக்­கா­விட்­டாலும் இவைகள் கருக்­கட்­டாத முட்­டை­க­ளாக தொடர்ந்து வெளி­யேறும். 

மனி­தர்கள் உட்­பட பாலூட்­டி­களில், விந்­துடன் இணைந்து கருக்­கட்­டாத முட்­டைகள் அழிந்து, மாத­விடாய் காலத்தில் குரு­தி­யுடன் வெளி­வரும். ஆனால் கோழி­களில் அப்­ப­டி­யல்ல. அவை கருக்­கட்­டாத, கரு உயிர் அற்ற முட்­டை­க­ளாக வெளி­யேறும். ஊரிலே கோழிக் குஞ்சு பொரிக்க, முட்­டை­களை அடை வைக்­கிறோம். அப்­போது, சில முட்­டைகள் குஞ்சு பொரிக்­காது கூழா­கின்­றன. இங்கு கூழாகும் முட்­டைகள் கருக்­கட்­டாத முட்­டைகள். குஞ்சு பொரிக்கும் முட்­டைகள் கருக்­கட்­டிய முட்­டைகள்.

கோழிப் பண்­ணை­களில் சிறிய கூடு­களில் வளரும் ஆயி­ரக்­க­ணக்­கான பேடு­களை, கிர­மமாய் 'விசிற்'பண்ணி சில்­மிஷம் பண்ண, சேவலால் முடி­யாது. பண்­ணை­களில் சேவல் வளர்க்­கப்­ப­டு­வதும் இல்லை. இதனால் பண்­ணை­க­ளி­லி­ருந்து சந்­தைக்கு வரும் முட்­டை­களில் உயிர்க்­கரு இருக்­காது. ஆனால் மற்ற எல்லாச் சத்­துக்­களும், கருக்­கட்­டிய முட்­டைகள் போன்று இருக்கும். 

பசு­வி­லி­ருந்து வரும் பாலுக்கும், பண்­ணை­க­ளி­லி­ருந்து வரும் கருக்­கட்­டாத, கரு­உயிர் அற்ற முட்­டை­க­ளுக்கும் வித்­தி­யா­ச­மில்லை. இவை பாலைப் போல புரதம், கொழுப்புச் சத்­துக்கள் அடங்­கிய சைவ முட்­டைகள். 

முட்­டைக்­காக வளர்க்­கப்­படும் கோழிகள், கறிக்­கோழி இனங்­க­ளல்ல. கறிக்­கோழி வளர்ப்பில் சேவ­லாக இருந்­தா­லென்ன பேடு­க­ளாக இருந்­தா­லென்ன அவற்றின் சதைதான் முக்­கியம். ஆனால் முட்­டைக்­காக வளர்க்­கப்­படுக் கோழிக் குஞ்­சுகள் எல்­லாமே பேடு­க­ளாக வள­ர­வேண்டும். முட்­டை­யிடும் கோழி இனங்­களில் சதை­வ­ளர்ச்சி இருக்­காது. இவற்றை இறைச்­சிக்­காக வளர்த்து விற்­பனை செய்தால் பண்­ணைக்­காரர் திவா­லா­கி­வி­டுவார். 

கிரா­மங்­களில் சேவல் கோழி­க­ளையும் முட்­டை­யிட்டு ஓய்ந்த பேட்டுக் கோழி­க­ளையும் அடித்தே குழம்பு வைப்­பார்கள். ஆனால் கறிக்­கோ­ழிகள் எனப்­படும் புரொ­யிலர் கோழிகள் இன­வி­ருத்தி செய்­யப்­பட்ட பின்பு எல்லாம் தலை­கீ­ழாக மாறி­விட்­டன. காரணம் புரொ­யி­லர்­கோழி இனங்கள் 45 நாட்­களில் இரண்டு கிலோ­வரை வள­ரக்­கூ­டி­யன. இதற்­குமேல் அவற்றின் சதை வளர்ச்சி வெகு­வாகக் குறைந்­து­விடும்.  இதனால் 45 நாட்­க­ளுக்கு மேல் கறிக் கோழி­களை வளர்ப்­பது இலா­ப­க­ர­மா­ன­தல்ல. பண்­ணை­க­ளி­லி­ருந்து சந்­தைக்­கு­வரும் புரொ­யிலர் கோழிகள் பெரும்­பாலும் நாற்­பத்­தைந்து நாட்கள் உயிர் வாழ்ந்­த­வையே! 

இவை உயி­ருடன் வாழ்ந்த நாட்­க­ளை­விட உறை­குளிர்ப் பெட்­டி­களில் அதிக காலம் இருந்­தவை என்­பதே உண்மை. 32 நாட்க­ளி­லேயே இரண்டு கிலோ இறைச்­சியை கொடுக்­கக்­கூ­டிய கறிக்­கோ­ழியை இப்­பொ­ழுது இன­வி­ருத்தி செய்­துள்­ளார்கள். இந்த இனத்­துக்கு கோப் (Cobb) என்று பெயர். 

கறிக்­கோ­ழிகள், அங்­கிங்கு திரும்ப முடி­யாத சிறிய கூண்­டு­களில் வளர்க்­கப்­ப­டு­வன. அவற்றைக் கூண்­டுக்கு வெளியே விட்டால் அவற்றால் ஓட­மு­டி­யாது. 32 நாட்களில் இரண்டு கிலோ­வரை வளரும் கோப் இன கறிக்­கோ­ழி­களின் கால்­களால் அதன் உடல் பாரத்தை தாங்­க­மு­டி­யாது விழுந்­து­விடும். கூண்­டுக்குள் இருந்­த­ப­டியே தீன் தின்னும் கோழியின் உடல்­வ­ளரும் வீதத்­துக்­கேற்ப இரு­தயம் வளர்­வ­தில்லை. இதனால் கோழியின் சிறிய இரு­த­யத்தால் பெரிய உட­லுக்கு இரத்­தத்தைப் பாய்ச்ச முடி­வ­தில்லை. 

நாட்­டுக்­கோ­ழிகள் 45 நாட்­களில் கால் கிலோவும் தேற­மாட்­டது. ஆனால் பண்­ணை­களில் வளர்க்­கப்­படும் புரொ­யிலர் கோழிகள் எப்­படி இரண்டு கிலோ நிறைக்­குமேல் விருத்­தி­ய­டை­கின்­றன? என்ற கேள்வி நியா­ய­மா­னதே. 

வளர்ச்­சிக்­கான ஹோர்­மோன்­களை கோழித்­தீ­னுடன் கொடுப்­பது வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் குற்­ற­மாகும். இலங்கை, இந்­தியா போன்ற நாடு­க­ளிலும் கோழித் தீனுடன் ஹோமோன்கள் கொடுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. சதை வளர்ச்­சிக்­கான ஹோர்­மோன்­களின் விலை அதி­க­மா­தலால் இது இலா­ப­க­ர­மா­ன­தல்ல. ஆனால் புரொயி­லர் ­கோழி இனங்கள் விரைவில் சதை­வைக்­கு­மாறு இன­வி­ருத்தி செய்­யப்­பட்­டவை. இவற்றின் உட­லுக்குள் விரைவில் சதை­வ­ளர்­வ­தற்­கான மர­ப­ணுக்­க­ளுண்டு. இந்த மர­பணுக்கள் நாளொன்­றுக்கு 50 கிரா­முக்­கு­மே­லான சதையை வளர்க்கும் வகையில் ஹோர்மோன்களை கோழியின் உடலுக்குள் உற்பத்திசெய்யும். 

கறிக்கோழியின் தசைகளில் பாவிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஹோமோன்கள்,  கோழியை உட்கொள்ளும் மனித உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாமென நம்பப்படுகிறது. 

இதனால் தான் பிள்ளைகளுக்கு அதிக கறிக்கோழி கொடுப்பது நல்லதல்ல என்றும்  பெண்பிள்ளைகள் குறைந்த வயதில் பூப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமெனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இவை விஞ்ஞான ரீதியாக  இன்னமும் நிரூபிக்கப்படவில்லை!