வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி அறிமுகம்

Published By: Digital Desk 3

30 Jun, 2026 | 10:08 AM
image

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபல குறுந்தகவல் செயலியான வட்ஸ்அப், பயனர்கள் பலராலும் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 'யூசர்நேம்' வசதியை முதற்கட்டமாக அறிமுகப்படுத்த ஆரம்பமாகியுள்ளது.

 இதன் மூலம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகளவில் இந்த வசதி முழுமையாக அறிமுகமாவதற்கு முன்னரே, பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான தனித்துவமான யூசர்நேம்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில், புதிய நபர்களுடன் உரையாடலை ஆரம்பிக்கும் போது "உங்க போன் நம்பர் என்ன?" என்று கேட்பதற்குப் பதிலாக, "உங்க வட்ஸ்அப் யூசர்நேம் என்ன?" என கேட்கும் புதிய கலாச்சாரம் உருவாகவுள்ளதாக வட்ஸ்அப் பகிர்ந்துள்ள செயலி வழி அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.

தகுதியுடைய கணக்குகளைக் கொண்ட பயனர்கள் தங்களின் வட்ஸ்அப் செயலியைப் புதிய பதிப்பிற்கு புதுப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.

வட்ஸ்அப் செயலியில் Settings > Account > Username என்ற பகுதிக்குச் சென்று தங்களுக்குத் தேவையான யூசர்நேமைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமை பெருமளவில் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் இந்த யூசர்நேம் வசதியைச் செயல்படுத்திய பின்னர், ஏதேனும் ஒரு நபருக்கோ அல்லது வணிகக் கணக்கிற்கோ (Business Account) முதன்முறையாக மெசேஜ் அனுப்பும் போது, அவர்களுக்கு உங்களுடைய மொபைல் எண் காட்டப்படாது.

பல சூழ்நிலைகளில் தங்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களைப் பிறருக்குப் பகிர விரும்பாத மக்களுக்கு, இந்த யூசர்நேம் மூலம் இணைவது மிகவும் பாதுகாப்பானதாக அமையும்.

மெட்டா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை, "விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யக்கூடிய இந்த யூசர்நேமைப் புதிய வட்ஸ்அப் பதிப்பில் சில வினாடிகளில் பதிவு செய்துகொள்ளலாம். வரும் மாதங்களில் படிப்படியாக இந்த வசதியை அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். உங்கள் நாட்டில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் போது வட்ஸ்அப் செயலி மூலமாகவே உங்களுக்குத் அறிவிக்கப்படும்" என மெட்டா தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் தற்போது கட்டம் கட்டமாகவே வெளியிடப்பட்டு வருவதால், தற்போதைக்கு அனைத்துப் பயனர்களுக்கும் உடனே கிடைக்காமல் போகலாம். எனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த யூசர்நேம் அம்சம் முழுமையாகக் கிடைக்கும் என வட்ஸ்அப் உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36
news-image

கணினி, கையடக்கத் தொலைபேசிகளின் வேகத்தை அதிகரிக்கும்...

2026-08-11 11:17:38
news-image

கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன்...

2026-07-29 14:59:15
news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55