விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு. இந்துக் கல்லூரி தேசிய மட்டத்துக்கு தெரிவு

29 Jun, 2026 | 06:06 PM
image

மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (29) நடைபெற்ற மாகாண மட்ட விவாதப் போட்டியானது யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 

இதன்போது பரபரப்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் வட்டு. இந்துக் கல்லூரி விவாத அணி யாழ். இந்துக் கல்லூரி விவாத அணியை தோற்கடித்து தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேவேளை கடந்த வாரம் நடைபெற்ற மாகாண மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவி அருந்தவன் சரணியா முதல் நிலையை அடைந்து தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு வட்டு. இந்துக் கல்லூரி எதிர் யாழ். இந்துக் கல்லூரி தெரிவாகியிருந்தது.

வட்டு. இந்துக் கல்லூரி விவாத அணி சார்பில் சந்திரமோகன் ஷைந்தவி, அருந்தவன் சரணியா, றுஜிதா ஆனந்தராசா ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44