‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த நூறு நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடைபெற்று வந்த பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிக்பொஸ் நிகழ்ச்சியின் நூறாவது நாள் நேற்று (30) முடிவடைந்தது. இதன்போது, வெற்றிபெற்றவர் யார் என்பதை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதன்போது, தனது அரசியல் பிரவேசத்தையும் நடிகர் கமல்ஹாசன் உறுதிசெய்தார்.

“அரசியலில் குதிப்பதற்கான அச்சாரத்தை பிக்பொஸ் தந்துவிட்டது. இது ஆசையில் வருவதல்ல, அன்பில் வருவது. நீ நடிக்க வேண்டாம் என்று சொன்னால் நடிக்கவில்லை. வேறு வேலை செய் என்று நீங்கள் சொன்னால் செய்கிறேன். நீ அதற்கு லாயக்கில்லை என்று சொன்னால் ஒதுங்கிவிடுகிறேன். உங்கள் சேவையில் சாவதுதான் இந்தக் கலைஞனுக்கு நல்ல முடிவு” என்று கண்கலங்கினார் கமல்!