மாற்றங்கள் எப்போது நிகழும்?

29 Jun, 2026 | 04:54 PM
image

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கையை ஓரளவு திட்டமிட்டு தான் வாழத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பற்றாக்குறை இருந்தாலும்.. ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து விடும் என்ற அதீத நம்பிக்கையில் தங்களுடைய இல்லாமையை இறைவனிடம் மட்டும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் எப்போது நிகழும் என்பது தொடர்பாக சோதிட நிபுணர்களும் ஆன்மீக முன்னோர்களும் ஒரு சூட்சமமான குறிப்பினை வழங்கி உள்ளனர்.

உங்களுடைய ஜாதகத்தில் உள்ள நான்காம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகம் ஆகியவை கோச்சார ரீதியிலோ அல்லது தசா புத்தி வழியாகவோ இயங்க தொடங்கும் போது மாற்றம் நிகழக் கூடும். அத்துடன் இந்த இரண்டு பாவகங்களையும் கோச்சார ரீதியாக பயணிக்கும் செவ்வாய் மற்றும் சனி கிரகத்தின் இணைவு பெறும் போது மாற்றங்கள் நிகழ்கிறது.

அதாவது லக்னத்தில் இருந்து நான்காம் இடத்தில் சனி இருந்தாலும் அல்லது பத்தாம் இடத்தில் சனி இருந்தாலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்த தருணத்தில் சனியுடன் செவ்வாய் சேரும் காலகட்டத்தில் உறுதியாக மாற்றத்திற்கான நிகழ்வுகள் நடைபெறும். இந்த இணைவு பெறும் காலகட்டத்தில் உங்களுடைய திசா நாதனும் புத்தி நாதனும் உங்களுக்கு சுப பலன்களை வழங்க கடமைபட்டவர்களாக இருந்தால்... இந்த இணைவு உங்களை மேலும் புதிய உச்சத்திற்கு உயர்த்தும். அதே தருணத்தில் உங்களுடைய திசா நாதனும் புத்தி நாதனும் அசுப பலன்களை வழங்கினால்.. இந்த இணைவு உங்களுக்கு அசுப பலனையே கொடுக்கும்.

இதுபோன்ற தருணத்தில் சுப பலன்களை அதிகமாக பெற வேண்டும் என்றாலும் ...அசுப பலன்களை தவிர்க்க வேண்டும் என்றாலும்... சந்தையில் கிடைக்கும் சர்க்கரை கலந்த பொரி உருண்டையை தீபமேற்றி வணங்கி,  அதனை ஓடும் நதி நீரில் விட்டு விட வேண்டும். அத்துடன் தர்பூசணி அல்லது பேரிக்காய் எனப்படும் பழங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டு, முன்னேறுவீர்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24