பற்களை இழந்தவர்களுக்கு வர பிரசாதமான சைகோமா இம்பிளான்ட் சிகிச்சை

29 Jun, 2026 | 04:50 PM
image

விபத்தில் அடிப்பட்டு பற்களை இழந்து விட்டாலோ அல்லது முதுமையின் காரணமாக பற்களை முழுவதுமாக இழந்து விட்டாலோ அதன் பிறகு நாளாந்த வாழ்க்கை என்பது விருப்பத்திற்குரியதாக இல்லாமல் சங்கடத்துடன் கூடியதாக இருக்கும். இந்த நிலையில் பற்கள் இல்லை என்றால்.. அதனை மீண்டும் பொருத்துவதற்கு சைகோமா இம்பிளான்ட் எனும் நவீன சிறிய அளவிலான சத்திர சிகிச்சை அறிமுகம் ஆகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பற்களை இழந்தவர்களின் முக வடிவமும், முக பொலிவும் படிப்படியாக குறைந்துவிடும். இவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டாலும் அது தொடர்பான மன நிறைவை அவர்கள் பெறுவதில்லை. குறிப்பாக விருப்பத்திற்குரிய உணவை மென்று பசியாற முடிவதில்லை. இதனால் பற்கள் அவசியம் என்பதை உணர்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் தற்போது சைகோமா இம்பிளான்ட் எனும் நவீன சத்திர சிகிச்சையை கண்டறிந்து இருக்கிறார்கள்.

ஜைகோமெட்டிக் எனும் எம்முடைய வலிமை வாய்ந்த கன்னப் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எலும்புடன் புதிய பற்களுக்கான இம்பிளான்ட்டை பொருத்தி விடுவார்கள். இதன் மூலம் உங்களுடைய பற்கள் இயல்பான பற்களைப் போல் செயல்பட தொடங்கும். இத்தகைய சிகிச்சையின் போது கன்னப் எலும்பு வளைவின் பகுதி- பற்களை பொருத்துவதற்கு துல்லியமாக பயன்படுகிறது. இத்தகைய நவீன சத்திர சிகிச்சை நோயாளிகளின் முக பொலிவையும், பற்களின் செயல்பாட்டையும் மீட்டெடுக்கிறது.

இத்தகைய தருணத்தில் போது CBCT ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் வெற்றி வீதம் அதிகரிக்கிறது. இத்தகைய நவீன சிகிச்சை சத்திர சிகிச்சைக்கு பிறகு உங்களுடைய புன்னகையிலும், உணவை நன்றாக மென்று பசியாறும் விதத்திலும் அசலான உணர்வு ஏற்படுவதை உணரலாம். வயது வரம்பு இல்லை. வலியற்ற சத்திர சிகிச்சை முறை. ஒரே வாரத்தில் இயல்பான நிலைக்கு மீள இயலும். உங்கள் பற்கள் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதங்களில் உங்களுடைய பழைய பற்களுக்கான தோற்றம் கிடைத்து விடும்.

வைத்தியர் ராஜன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48