சொகுசு வாகனங்களுக்கான வருடாந்த வரியைச் செலுத்துவதற்கான கால எல்லை நவம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும், இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதி சொகுசு, சொகுசு மற்றும் இரட்டைப் பாவனைக்கான வாகனங்களுக்கான வரி நிலுவைகளைச் செலுத்துவதற்கான கால எல்லையை நவம்பர் மாதம் வரை நீட்டித்திருப்பதாக போக்குவரத்து அமைச்சு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.