(மூதூர் மேலதிக நிருபர்)
மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஏழாவது உற்சவத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (28) ஆலய வளாகத்தில் பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
திருவிழா நிகழ்வுகள் விசேட பூஜை மற்றும் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆலய வளாகத்தைச் சுற்றி பக்தர்கள் உலா கொண்டு வந்தனர்.
இதன்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
வரவேற்பு நடனம், பரதநாட்டியம், கம்பு வீச்சு, தீப்பந்த வீச்சு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
குறிப்பாக, அண்மையில் காலி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பாராட்டுப் பெற்ற பரதநாட்டியக் குழுவின் சிறப்பு நடன நிகழ்ச்சி அரங்கேறியது.
மேலும், மணற்சேனை சிவசங்கரா நாட்டியக் கலை ஆலய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மீனா குமாரி ஆசிரியரின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.
அதேவேளை, பந்தம் மற்றும் கம்பு வீச்சு நிகழ்ச்சிகள் சம்பூர் கலை மன்றத்தின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடத்தப்பட்டு, இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு ஆன்மீக மற்றும் கலை நிகழ்வுகளை கண்டு களித்தனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM