கெகிராவ - இபலோகம, கொனபதிராவ பகுதியில் மோட்டார் சைக்கிளும், கெப் வகை வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான கொனபதிராவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவராவார்.

கெப் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.