செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்

28 Jun, 2026 | 12:11 PM
image

யாழ்ப்­பாணம் செம்­மணி மனிதப் புதை­குழி விவ­காரம் தொடர்பில் இரா­ணுவ லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷவை சர்­வ­தேச விசா­ர­ணைக்குட்­ப­டுத்தி உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துரை­ராசா ரவி­கரன் பாரா­ளு­மன்­றத்தில் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உரை­யாற்­றிய போதே அவர் இந்த வேண்­டு­கோளை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்று தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகி­யோரும் இரா­ணுவக் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷவைவை உரிய விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி செம்­மணி மனித புதை­குழி தொடர்பில் உண்மை நிலையைக் கண்­ட­றிய வேண்டும் என்றும் அவரை யாழ்ப்­பா­ணத்­துக்கு அழைத்து வந்து ஏனைய மனித புதை­கு­ழிகள் தொடர்­பிலும் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

யாழ்ப்­பாணம், சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூரி மாணவி குமா­ர­சு­வாமி 1996ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் செம்­மணி பகு­தியில் இரா­ணு­வத்­தி­னரால் பல­வந்­த­மாக பிடிக்­கப்­பட்டு பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். அவரை தேடிச் சென்ற தாயார், சகோ­தரன், அயல்­வீட்­டுக்­காரர் ஆகியோர் படைத் தரப்­பி­னரால் பிடிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இந்தப் படு­கொலை விசா­ர­ணையின் போது லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷ உட்­பட இரா­ணு­வத்­தினர் கைது செய்­யப்­பட்டு வழக்கு விசா­ரணை இடம்­பெற்­றி­ருந்­தது. இதில் லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன உட்­பட்­டோ­ருக்கு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் மர­ண­தண்­டனை விதித்­தி­ருந்­தது. இதன்­போது செம்­மணி பகு­தியில் 300–400 பேர் வரை­யி­லானோர் படு­கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக சோம­ரத்ன ராஜபக் ஷ தகவல் வழங்­கி­யி­ருந்தார்.

அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, இந்த விடயம் தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்த நிலையில் சோம­ரத்ன ராஜபக் ஷ  அடை­யாளம் காட்­டிய ஒரு பகு­தியில் அகழ்வுப் பணிகள் இடம்­பெற்­றி­ருந்­தன. அதன்­போது 15 எலும்புக் கூடுகள் அந்த இடத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இதில் 2 எலும்புக்கூடுகள் அடை­யாளம் காணப்­பட்டும் இருந்­தன.

மீட்­கப்­பட்ட எலும்புக்கூடுகள் பகுப்­பாய்­வுக்­காக லண்டன் க்ளாஸ்கோ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால், இன்று வரையில் மீட்­கப்­பட்ட எலும்புக் கூடுகள் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னவா அல்­லது இல்­லையா என்ற விட­யத்தில் தெளி­வற்­றத்­தன்மை காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் செம்­மணி சிந்­து­பாத்தி மயா­னத்தில் கடந்த வருடம் இடம்­பெற்ற அகழ்வுப் பணியின் போது எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னை­ய­டுத்து அந்த பகு­தியில் அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதன்­போதே தற்­போது வரையில் இந்த மனித புதை­கு­ழியில் 400 இற்கும் மேற்­பட்ட எலும்புக் கூடுகள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. அவற்றில் 380 எலும்­புக்­கூ­டுகள் வரையில் மீட்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது அகழ்வுப் பணிகள் தற்­கா­லி­க­மாக ஜூலை மாதம் 15ஆம் திகதி வரையில் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

செம்­மணி மனித புதை­கு­ழி­யா­னது இலங்­கை­யி­லேயே அதி­கூ­டிய எலும்­புக்­கூ­டுகள் மீட்­கப்­பட்ட பாரிய புதை­கு­ழி­யாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தப் புதை­குழி அகழ்வு கடந்த வருடம் ஆரம்­பிக்­கப்­பட்ட போது செம்­மணி புதை­குழி தொடர்பில் பல்­வேறு தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு தான் தயா­ராக உள்­ள­தாக லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு தனது மனை­வியின் மூலம் அவர் கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். இதில் சர்­வ­தேச நீதி விசா­ரணை நடத்­தப்­பட்டால் செம்­மணி விவ­காரம் தொடர்பில் பல்­வேறு தக­வல்­களை வெளி­யிடத் தயா­ராக இருப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

செம்­மணி பகு­தியை விட அரி­யாலை, கொழும்­புத்­துறை பகு­தி­க­ளிலும் சட­லங்கள் புதைக்­கப்­பட்­டமை தனக்கு தெரியும் என்றும் அவர் இதன்­போது தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு செம்­மணி புதை­குழி விவ­கா­ரத்தில் சாட்­சி­ய­ளிக்க தயார் என்று லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷ கூறி­யுள்ள போதிலும் அவ­ரிடம் விசா­ர­ணை­களை நடத்தி உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்கு இன்­னமும் அர­சாங்­க­மா­னது நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

செம்­மணி புதை­குழி விவ­கா­ரத்தில் சாட்­சி­ய­ம­ளிக்கத் தயார் என்று சோம­ரத்ன ராஜபக் ஷ அறி­வித்­த­தை­ய­டுத்து காணாமல் போனோ­ருக்­கான ஆணைக்­கு­ழுவின் தலைவர் உட்­பட்ட சிலர் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு சென்று சோம­ரத்ன ராஜபக் ஷவை சந்­தித்­தி­ருந்­தனர். இரு தட­வைகள் இத்­த­கைய சந்­திப்பு இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இந்த சந்­திப்பு குறித்து தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்த போதிலும் என்ன விட­யங்கள் பேசப்­பட்­டன என்­பது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை.

அண்­மையில் செம்­மணி புதை­கு­ழிக்கு விஜயம் செய்­தி­ருந்த நீதி­ய­மைச்சர் யாழ்ப்­பா­ணத்தில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த போது, சோம­ரத்ன ராஜபக் ஷவின் விவ­காரம் குறித்து செய்­தி­யாளர்கள் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளனர். இதன்­போது பொது­மன்­னிப்பு வழங்­கி­னால்தான் சோம­ரத்ன ராஜபக் ஷ உண்­மை­களைக் கூறு­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார். உண்­மையைக் கூற வேண்­டு­மென நினைப்­பவர் இவ்­வாறு செய்­வாரா? என்று அமைச்சர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

செம்­மணி புதை­குழி தொடர்­பி­லான தக­வல்­களை முதன்­மு­தலில் சோம­ரத்ன ராஜபக் ஷவே நீதி­மன்­றத்தில் 1997ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே அங்கு அவர் அடை­யாளம் காட்­டிய இடத்தில் புதை­குழி தோண்­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அன்­றைய அர­சாங்கக் காலத்தில் அதற்கு மேல் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

தற்­போது சோம­ரத்ன ராஜபக் ஷ கூறி­யதைப் போன்று அங்கு பெரு­ம­ளவு சட­லங்கள் புதைக்­கப்­பட்­டன என்­பதை நிரூ­பிக்கும் வகையில் 400 இற்கும் மேற்­பட்ட எலும்­புக்­கூ­டுகள் தற்­போது மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் உண்­மை­களைக் கூறு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த புதை­கு­ழி­யுடன் சம்­பந்­தப்­பட்ட அன்­றைய இரா­ணுவ அதி­கா­ரிகள் தொடர்­பிலும் அவர் அன்­றைய காலப் பகு­தியில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். ஆனால், அன்­றைய அர­சாங்க காலத்தில் அந்த விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. தற்­போது புதிய விட­யங்கள் தொடர்பில் சாட்­சி­ய­ளி­மக்கத் தயா­ராக இருப்­ப­தாக சோம­ரத்ன ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே அன்று இடம்­பெற்ற இந்த கொடூ­ரத்­துக்கு நீதி வழங்­கப்­பட வேண்­டு­மானால் செம்­மணி மனித புதை­குழி தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும். அதற்கு கண்­கண்ட சாட்­சி­யா­க­வுள்ள லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷ மீது உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட வேண்டும்.

அவர் சர்­வ­தேச விசா­ர­ணை­யாளர் முன்­னி­லையில் சாட்­சி­ய­ளிக்கத் தயார் என்றே கூறி­யி­ருக்­கின்றார். ஆனாலும் செம்­மணி மனித புதை­குழி விசா­ர­ணை­களில் தொடர்ச்­சி­யாக லான்ஸ் கோப்ரல் சோம­ரத்ன ராஜபக் ஷவிடம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்டும். அவ­ரிடம் நடந்த சம்­ப­வங்­களை கேட்­ட­றிந்து அதனை வாக்­கு­மூ­ல­மாக பதிவு செய்து அடுத்­த­கட்ட சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தா­க­வுள்­ளது.

நாட்டில் பாரிய புதை­கு­ழி­யாக இன்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள செம்­மணி மனித புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். அன்று 1995ஆம் ஆண்டில் யாழ். குடா­நாடு படை­யினர் வசம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்தக் காலப் பகு­தியில் பெரு­ம­ள­வானோர் காணாமல் ஆக்கப்­பட்­டனர். இவ்­வாறு காணாமல் போன­வர்கள் கொன்று குவிக்­கப்­பட்­ட­மைக்கு சாட்­சி­யா­கவே இன்று செம்­மணி மனித புதை­குழி திகழ்­கின்­றது.

1994ஆம் ஆண்டு சமாதான தேவதையாக ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலேயே இந்த மனித புதைகுழி உருவாக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர் பிரதமராக பதவி வகித்த போது இரத்தினபுரியில் புதைகுழி ஒன்று அகழப்பட்டது. அதில் பெருமளவான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. அன்று ஜே.வி.பி.யின் கிளர்ச்சியின் போது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது எலும்புக் கூடுகளாக அவை இருக்கலாம் என்று அன்று கருதப்பட்டது.

மாத்தறை புதைகுழி தோண்டப்பட்டதையடுத்தே ஜனாதி பதியாக சந்திரிகா குமாரதுங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தெற்கில் ஏற்பட்டிருந்தது. ஆனால், அவரது ஆட்சியிலேயே செம்மணி மனித புதைகுழி உருவாக்கப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும். எனவே, இந்த புதைகுழி தொடர்பில் சோமரத்ன ராஜபக் ஷவிடம் உரிய வகையில் விசாரணைகளை நடத்தி உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41