வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் செல்லப்பட்டதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடுத்துச் செல்லப்பட்ட ஏவுகணைகள் மத்திய தர அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஏவுகணைகள் எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜப்பான் கடற்பரப்பின் மேலாக ஏவுகணை பரிசோதனை செய்தும், அமெரிக்கா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும் வரும் வடகொரியா, என்ன செய்யப்போகிறது என்று தெரியாமல் சர்வதேசமும் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறது.