மிஹிந்தலை பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் மீது தகாத வார்த்தைகளை பிரயோகித்து தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு சேவைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருடிய குற்றமொன்றிற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் இருவரை அநுராதபுர குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தகாத வார்த்தைகளை கூறியும் தாக்கியும் உள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்குள்ளான இரு இளைஞர்களும் அநுராதபுர சிரேஷ்ட பொலிஸ் தலைமை அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விசாரணைகளுக்குட்படுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து  சேவைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.