சிரியாவில், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இட்லிப் பிராந்தியத்தில் நேற்றிரவு (29) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட இருபத்தெட்டுப் பேர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அர்மனாஸ் நகரிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இத்தாக்குதல் குறித்து சிரிய படையினர் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.