கல்கிசை பகுதியில் மியன்மார் அகதிகள் 30 பேர் தங்கியிருந்த வீட்டின் முன் வன்முறையிலீடுபட்டார் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரையே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் வன்முறையில் ஈடுபட்ட மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.