புதிய அலை கலை வட்ட மகளிர் அமைப்பின் தலைவியாக சிவகெளரி

Published By: Digital Desk 2

26 Jun, 2026 | 04:14 PM
image

தலைநகரில் தனித்துவத்தோடு இயங்கும்  புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியாகதிருமதி  சிவகௌரி.(சுடரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல்மாணி சிறப்புக் கற்கை மற்றும் உளவியல் சான்றிதழ் கற்கை நிறைவு செய்துடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத் தில் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி  செய்தவர் ஆவார்.

தொழில் ரீதியாக 2008 இல் பதிவாளர் நாயக திணைக் களத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக முதல் நியமனம் பெற்றவர்தற்போது வவுனியா மாவட்ட பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளராக கடமை புரிகிறார்

அத்தோடு பதிவாளர் நாயக திணைக்களத் தின் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப் பாளராகவும்நீதியமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளராகவும் கடமையாற்றி  வருகின்றார். 

கலை,இலக்கிய துறையில் இதுவரை சஞ்சிகைகள், ஆண்டு மலர்கள் போன்றவற்றிற்கு கவிதை,கட்டுரை சிறுகதை என ஆக்கங்கள் எழுதி வருகிறார்.

2025 ஆம் ஆண்டு முதல்  பல நூல்களை வெளியிட்டுவருகிறார். இவரது முதலாவது கவிதை தொகுப்பு "பிரபஞ்ச பேரொளியே..." அடுத்தது  சிறுகதை தொகுப்பான "அவளுக்கென்று ஓர் உலகம்" மற்றையது"காதலாகி...." எனும் கவிதை தொகுப்பு "உனக்குள் உன்னைத்தேடு" என்னும் கட்டுரை தொகுப்பு. முத்துப்பரல்கள் ஹைக்கூ  தொகுப்பு என்பன அடங்கும்  இன்னும்  பல படைப்புகளும் வெளிவர உள்ளன.

சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் பொதுப் பணிகளில் ஈடுபடுபவராகவும் விளங்கும்  இவர் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின்  தலைவியாக தெரிவாகி இருப்பது வாழ்த்துக்கும் பாராட்டுக்குமுரியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44