தலவாக்கலை நகரில் நேற்று மாலை இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

தலவாக்கலை பொது சந்தையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.