13 ஆவது ஸாஹிரா சுப்பர் – 16 கால்பந்தாட்ட தொடர்

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 12:48 PM
image

ஸாஹிரா சுப்பர் – 16 கால்­பந்து சம்­பி­யன்ஷிப் போட்டித் தொடர் 13ஆவது வரு­ட­மாக நடை­பெ­று­வ­தற்கு தயாரா­கி­யுள்­ளது.

எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தத் தொடரில் இலங்­கையின் பிர­பல விளை­யாட்டு வீரர்கள் உட்­பட பிர­ப­லங்கள் கலந்­து­கொள்ளும் கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றை நடத்­து­வ­தற்கும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

கொழும்பு ஸாஹிரா கல்­லூரி தனது கால்­பந்து வர­லாற்றில் 100 ஆண்­டு­களை பதிவு செய்­தி­ருக்கும் நிலையில், அதன் பெரு­மையை பறை­சாற்றும் வகை­யி­லேயே 13 ஆவது ஸாஹிரா சுப்பர் – 16 கால்­பந்து சம்­பி­யன்ஷிப் போட்டித் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.

ஸாஹிரா சுப்பர் – 16 தொடர்

ஒக்­டோபர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்­ப­மாகி 22 ஆம் திகதி முடி­வ­டை­ய­வுள்­ளது. 

கடந்த 12 ஆண்­டு­க­ளாக இந்த தொடர் அணிக்கு எழுவர் கொண்ட கால்­பந்து தொட­ராக ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­போதும் அதனை சம்­பி­ர­தா­ய­மான அணிக்கு பதி­னொ­ருவர் கொண்ட தொட­ராக நடத்­து­வ­தற்கு ஏற்­பாட்­டா­ளர்­க­ளான ஸாஹிரா கல்­லூரி முன்னாள் மாணவர் தலைவர் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

இது வீரர்­க­ளுக்கு மேலும் திற­மையை வெளிக்­காட்­டவும் இலங்­கையின் இளம் கால்­பந்து வீரர்­க­ளுக்கு பெறு­மதி கொண்­ட­தா­கவும் இருக்கும் என்றும் ஏற்­பாட்டுக் குழு­வினர் கரு­து­கின்­றனர்.

இந்த ஆண்டு தொடரில் ஸாஹி­ராவின் கடும் போட்­டி­யா­ள­ரான ஹமீட் அல் ஹுஸைனி கல்­லூரி, கேட்வே சர்­வ­தேச பாட­சாலை, லைசியம் மற்றும் யாழ். புனித ஹென்­றி­ய­ரசர் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right