தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன கருவிகள்!

Published By: Digital Desk 1

25 Jun, 2026 | 03:14 PM
image

தலைவலியை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்தத் தலைவலி சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் அல்லது சில மணித்தியாலங்கள் வரை நீடித்தாலும், அவை ஏற்படுத்தும் உளவியல் ரீதியான பாதிப்பை அளவிட இயலாது. இந்நிலையில்தான் தலைவலிகளில் 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத்தலைவலி மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கு நவீன மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைத்தாலும், தற்போது இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்க 'நியூரோமாடுலேஷன்'  என வகைப்படுத்தப்பட்ட பிரத்யேக கருவிகளாலான நிவாரண சிகிச்சையும் அறிமுகமாகி நல்ல பலன் அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக மைக்ரேன் தலைவலி கடுமையாகும் போது, மருந்தியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்காத தருணத்தில், அதனை எதிர்கொள்வதற்காக சுகாதாரத்துறை மின் மற்றும் காந்த ஆற்றலுடனான பிரத்யேக நிவாரண கருவிகளைக் கண்டறிந்துள்ளது. இந்தச் சிகிச்சை, மூளையின் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் தலைவலியை உண்டாக்கும் நரம்புகளைச் சீராக்கும் நவீன சிகிச்சையாகும். இத்தகைய கருவிகளைப் பாவிப்பதன் மூலம் மைக்ரேன் உள்ளிட்ட கடுமையான மற்றும் நாள்பட்ட தலைவலி பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

'நியூரோமாடுலேஷன்' எனக் குறிப்பிடப்படும் இத்தகைய கருவிகள் ஒவ்வொரு வகை தலைவலிக்கும் எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மைக்ரேன் மற்றும் கிளஸ்டர் ஹெட் ஏக் போன்ற கடுமையான தலைவலிகளுக்கும் இத்தகைய கருவியின் மூலமாகச் சிகிச்சை பெறுவது சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது.

இத்தகைய கருவிகளைப் பொருத்திக் கொண்டு சிகிச்சை பெறும்போது, இந்தக்கருவியிலிருந்து வெளியாகும் மின்னாற்றல் மற்றும் காந்த ஆற்றல் நம்முடைய மூளை மண்டலத்தில் உள்ள நரம்புகளில் அதிர்வை ஏற்படுத்தி, 'செரட்டோனின்' எனும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, வலியைக் குறைப்பதுடன் அதனைத் தடுக்கவும் உதவுகிறது. பக்கவிளைவு இல்லாத, பாதுகாப்பான, மருந்தில்லாத மாற்று சிகிச்சை என்பதால் இதற்கான வரவேற்பு தற்போது அதிகரித்து வருகிறது.

மருத்துவர்: சுமன்
தொகுப்பு: அனுஷா   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48