பங்­க­ளா­தேஷில் 8 இலட்சம் போதை மாத்­தி­ரை­களை கடத்­திய 3 ரோஹிங்யா வாலி­பர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மியான்­மாரின் ரக்­கி­னேவில் இரா­ணுவ நட­வ­டிக்கை மற்றும் கல­வ­ரத்தால் ரோஹிங்யா இன மக்கள் கடும் இன்­னல்­களை சந்­தித்து வரு­கின்­றனர். 

அங்­கி­ருந்து உயிர்­ தப்­பிக்க சுமார் 5 இலட்சம் ரோஹிங்யா மக்கள் பங்­க­ளா­தேஷில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். ரோஹிங்யா அக­தி­க­ளுடன் பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளுடன் தொடர்பு உள்­ளது எனவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லையில் பங்­க­ளா­தே­ஷிற்கு யாபா என்ற போதை மாத்­தி­ரை­களை கடத்­தி­ வந்த ரோஹிங்­யாக்­களை அந்­நாட்டு பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 3 ரோஹிங்­யாக்கள் மற்றும் ஒரு பங்­க­ளாதேஷ் நாட்­டவர் இச்­சம்­ப­வத்தில் கைது செய்­யப்­பட்டு உள்­ளனர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

பங்­க­ளாதேஷ் மற்றும் மியான்மார் நாட்டை பிரிக்கும் நாப் ஆற்றில் படகில் சென்­ற­வர்­களை பங்­க­ளாதேஷ் சிறப்பு படை பொலிஸ் இடை­ம­றித்து விசா­ரித்த போது கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. படகில் இருந்து 8 இலட்சம் போதை மாத்­தி­ரைகள் பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த வாரமும் 430,000 போதை மாத்­தி­ரை­களை கடத்­தி­ய­தாக இரு ரோஹிங்யா வாலி­பர்­களை பொலிஸார் கைது செய்தது.