ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு சென்றால் தோல்­வி­ய­டைவோம் என மஹிந்த ராஜ­பக் ஷ வுக்கு இரண்டு மணி­நேரம் விளக்­கிக்­கூ­றினேன். பின்னர் தனது தவறை என்­னி டம் ஒப்­புக்­கொண்டார் என இலங்கை கம்­யூனி ஸ்ட் கட்சி செய­லா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான டியு குண­சே­கர தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் உரி­மைக்­காக ஆரம்பம் முதல் போரா­டி­யது இலங்கை கம்­ யூனிஸ்ட் கட்­சி­யாகும் என்றும் தெரி­வித் தார்.

இலங்கை கம்­யூனிஸ்ட் கட்­சியின் 21 ஆவது தேசிய சம்­மே­ளனம் நேற்று நார­ஹேன்­பிட்டி ஷாலிகா மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் பிர­தான உரை நிகழ்த்­து­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் தேசி­யப்­பி­ரச்­சினை இருப்­ப­தாக 1944ஆம் ஆண்டு எமது கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு முதல் வரு­டத்­திலேயே நாங்கள் தெரி­வித்தோம். அதற்கு தீர்­வு­கா­ண­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் முன்­வைத்தோம். அத்­து டன் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணா­விட் டால் எதிர்­கா­லத்தில் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என்றும் தெரி­வித்தோம். அதன் பிர­காரம் 1956ஆம் ஆண்டு மொழிப்­பி­ரச்­சினை ஏற்­பட்­டது.

மொழிப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக நாங்கள் போரா­டினோம். அதனால் எமது கட்சி உறுப்­பி­னர்கள் தாக்­கப்­பட்­ட னர். அதனால் பலர் உயி­ரி­ழந்­தனர். தேர்­தல்­களில் தோல்­வி­ய­டைந்தோம். என்­றாலும் நாங்கள் எமது நிலைப்­பாட்டில் இருந்து வில­க­வில்லை. அதன் ­கா­ர­ண­மாக தற்­போது அனைத்து கட்­சி­களும் சிங்­களம் மற்றும் தமிழ் மொழியை அரச மொழி­யாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளன . அன்று நாங்கள்  தமிழ் மக்­க­ளுக்­கா­கவே தாக்­கப்­பட்டோம்.  

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கல­வ­ரத்­தின்­போது எமது கட்சி முன்­னின்று தமிழ் மக்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­தது. அதனால் எமது கட்சி தடை­செய்­யப்­பட்­டது. எமது ஆத­ர­வா­ளர்கள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர். அத்­துடன் எமது கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு முதல் வரு­டத்தில் இந்­தி­யாவில் இருந்­து­வந்த மலை­யக மக்­களின் வாக்­கு­ரி­மையை இரத்­துச்­செய்­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சட்டமூலத்தை தோற்­க­டிப்­ப­தற்கு முன்­னின்று செயற்­பட்­டது.

மேலும் எமது கட்­சியின் 20ஆவது சம்­மே­ளனம் 2014ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­போது, நாட்டில் அர­சி­யலில் 2015ஆம் ஆண்டு பாரிய மாற்றம் இடம்­பெ­றலாம் என்று தெரி­வித்தேன். அத்­துடன் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டாம் என மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு 2 மணிநேரம் நான் தெளிவுபடுத்­தினேன். அவ்­வாறு தேர்­த­லு க்கு சென்றால் நிச்­ச­ய­மாக தோல்­வி­ய­டை வோம் என்று அர­சியல் எதிர்­வு­கூ­ற­லாக தெரி­வித்தேன். பின்னர் மஹிந்த ராஜ­பக் ஷ என்­னிடம் வந்து, உங்கள் பேச்சை கேட்­கா மல் இருந்­தது நான் செய்த தவ­றாகும்  என்று தெரி­வித்தார்.  இன்று அர­சியல் எதி ர்வு கூரல்­களை ஏற்­றுக்­கொள்ளும் தன்மை தலை­வர்­க­ளி­டமும் இல்லை. அர­சியல் வாதி­க­ளி­டமும் இல்லை. எதிர்­கால அர­சி யல் நிலை­மை­களை அறிந்­து­கொள்ள சாஸ்­தி­ரக்­கா­ரர்­களிடம் செல்லும் நிலையே ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் உலகம்  பொரு­ளா­தார மற்றும் பயங்­க­ர­வாத பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றது. பயங்­க­ர­வாதம் சர்­வ­தேச மட்­டத்தில் வியா­பித்­துள்­ளது. எமது நாடும் 30 வரு­டங்கள் இந்த பயங்­க­ர­வாத பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுத்து வந்­தது. பயங்­க­ர­வா­தத்­துக்கு அடிப்­ப­டைக்­கா­ர­ண­மாக இருப்­பது பொரு­ளா­தார பிரச்­சி­னை­யாகும். அதனால் அந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும். இது தொடர்­பாக அர­சி­யல்­வா­திகள் சிந்­திப்­ப­தில்லை.

எனவே விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் தீர்வுகள் இல்லாத பிரச்சினை இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண் டும். அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஊழல் மோசடியா கும். இன்று அது சர்வதேச மட்டத்தில் வியாபித்து சென்றுள்ளது. இதனை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என் றார்.