ரோஹிங்­யா அக­தி­களின் உரி­மைகள் அத்­து­மீ­றப்­பட்டு பூஸா சிறையில் தற்­கா­லி­க­மாக தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  கடு­மை­யான கண்­ட­னத்­தினை வெளி­யிட்­டுள்­ளது.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான பாரா­ளு­மன்றக் குழு­வொன்று அமெ­ரிக்­கா­வுக்குச் சென்­றுள்ள நிலையில் அதில் பங்­கேற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தனது உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தில் மேற்­கண்­ட­வாறு கண்­ட­னத்­தினை தெரி­வித்­துள்ளார்.

மியன்மார் ரோஹிங்­­யா­வி­லி­ருந்து அக­தி­க­ளாக இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த முஸ்லிம் மக்கள் கல்­கிஸைப் பகு­தியில் தங்­கி­யி­ருந்த வீட்­டினை முற்­று­கை­யிட்ட குழு மிலேச்­சத்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் அந்த மக்களை பாதுகாக்கும் முகமாக தற்காலிகமாக பூஸா சிறையில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.