தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களுள் ஒன்­றான ரெலோ அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளுடன் எதிர்­வரும் ஒக்­டோபர் மூன்றாம் திகதி சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கு தயார் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி அறி­வித்­துள்­ளது.

கடந்த வார இறு­தியில் ரெலோ அமைப்பின் அர­சியல் தலை­மைக்­கு­ழுவின்  கூட்டம் அதன் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. தலை­மையில் வவு­னி­யாவில் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல்,  மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல்,  அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை குறித்த முக்­கிய விட­யங்கள்  தொடர்பில்  கொள்கை ரீதி­யி­லான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்­காக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உத்­தி­யோகபூர்வ குழுவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய பின்னர் தீர்க்­க­மான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தென முடி­வெ­டுக்­கப்­பட்­டது. 

இது­கு­றித்த அறி­விப்பு   இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி.க்கும் அக்­கட்­சியின் செய­லா­ளரும் கிழக்கு மாகாண அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ஜ­சிங்­கத்­துக்கும் ரெலோ அமைப்பின் தலை­மை­யினால் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா,  ரெலோ அமைப்பின் கோரிக்கை கடிதம் எமக்கு கிடைத்­தது. அத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரும் ஒக்­டோபர் மூன்றாம் திகதி ரெலோவை சந்­திப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். அது குறித்த அறி­விப்­பினை விரைவில் செய்வோம் என்றார்.

அதே­நேரம் குறித்த  சந்­திப்­பினை வார இறு­தியில்  நடத்­து­வ­தற்கு ரெலோ அமை ப்பு ஆராய்ந்து வரு­வ­தோடு தமி­ழ­ரசுக் கட்சி அறி­வித்­துள்ள திக­தியை மாற்­று­வது குறித்து மீள் ­ப­ரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­வது குறித்து கோர­வுள்­ள­தாக ரெலோ அமைப்­பினர் தெரி­வித்­துள்ளர்.

ரெலோ அமைப்பு போன்று ஏனைய பங்­கா­ளிக் ­கட்­சி­க­ளு­டனும் சந்திப்புக்களை நடத்துவதற்கு தமிழரசுக் கட்சி தயாராக வுள்ள தாகவும் அது குறித்த நடவடிக் கைகள் எதிர்வரும் காலங்களில் இடம் பெறும் எனவும் சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.